7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்!

 

7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்!

ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் எப்போது முடிவெடுப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்!ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பான கோப்பு ஆளுநர் மாளிகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் இவ்வளவு காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. இதனால், ஆளுநரின் முடிவு தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு விடுதலை செய்வது என்று முடிவெடுத்த

7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்!பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவருடைய தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தீர்மானம் குறித்து பேச்சு வந்தது. அப்போது “ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இன்னும் எத்தனை காலத்துக்கு முடிவெடுக்காமல் இருக்கப் போகிறார். முடிவெடுப்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். தமிழக ஆளுநருக்கு எதிரான கருத்து என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.