கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – ரஷ்யா முக்கிய அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – ரஷ்யா முக்கிய அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 72 லட்சத்து  92 ஆயிரத்து 585 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 93 லட்சத்து 77 ஆயிரத்து 268 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 88 ஆயிரத்து 554 பேர்.

கொரோனா பாதிப்பு அதிக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. உலகம் முழுவதுமே கொரோனாவின் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – ரஷ்யா முக்கிய அறிவிப்பு

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க, ஒரே வழி தடுப்பு மருந்து பயன்படுத்துவதுதான் என்ற நிலைமைக்கு உலகம் சென்றுக்கொண்டிக்கிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – ரஷ்யா முக்கிய அறிவிப்பு
(AP Photo/Ted S. Warren)

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

எல்லாம் சரி. இந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது. அதற்கான பதிலை ரஷ்ய தரப்பில் சொல்லப்பட்டு அந்நாட்டின் ஊடகங்களின் பேசுபொருளே இதுதான்.

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – ரஷ்யா முக்கிய அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் 5 வரும் வாரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடுமாம். அதவது செப்டம்பர் 10  – 13 தேதிகள் பொதுமக்களுக்கு இத்தடுப்பூசியை அளிக்க ஒப்புதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெற்றிகரமாக இது முடியும்பட்சத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது கொரோனா தடுப்பூசி.