டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவது எப்போது? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!

12-ந் தேதி வரை நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக போட்டி தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எப்போது நடக்கும் என அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக போட்டி தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச்சில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் தொடரை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என்று கூறியுள்ள அவர், கொரோனா காரணமாக tnpl தொடரை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...