‘இம்ரான் தாஹீரை ஆட விடுவீங்களா… மாட்டீங்களா?’ CSK அதிகாரி விளக்கம்

 

‘இம்ரான் தாஹீரை ஆட விடுவீங்களா… மாட்டீங்களா?’ CSK அதிகாரி விளக்கம்

ஐபிஎல் திருவிழாவில் கலந்துகொள்ள உற்சாகமாக ரஜினி வசனத்தை டிவிட்டரில் பதிவிட்டு ஐக்கிய அமீரகத்திற்கு விமானம் ஏறியவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர் இம்ரான் தாஹீர். ஆனால், இதுவரை எட்டுப் போட்டிகளில் ஆடியிருக்கும் சிஎஸ்கே ஒருமுறைக்கூட இம்ரான் தாகூரை ஆடும் லெவன் அணிக்குள் கொண்டுவரவே இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை எட்டுப் போட்டிகளில் ஆடி மூன்றில் வென்று பாயிண்ட் டேபிளில் ஆறாம் இடத்தில் உள்ளது. கேதர் ஜாதவ் சரியாக ஆடவில்லை என்பதால், ருத்ராஜ் கெய்க்வார், ஜெகதீஷனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இம்ரான் தாஹீருக்கு ஒரு போட்டியில்கூட பந்து வீசும் சூழல் அமையவே இல்லை.

‘இம்ரான் தாஹீரை ஆட விடுவீங்களா… மாட்டீங்களா?’ CSK அதிகாரி விளக்கம்

இதுகுறித்து போட்டி வர்ணனையாளர்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஆங்காங்கே தாங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக , ’எல்லோரின் விருப்பத்துக்கு உரிய இம்ரான் தாஹீர் கட்டாயம் ஐபிஎல் தொடரில் ஆடுவார். அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஐக்கிய அமீரக மைதானங்கள் ஸ்பின் பவுலர்களுக்கு ஏதுவாக அமையும். அப்போது நிச்சயம் இடம்பிடிப்பார். அப்போதைய நிலைக்கு ஏற்றமாதிரி அணிக்குள் மாற்றம் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி இ ஒ காசி விஸ்வநாதன்.

‘இம்ரான் தாஹீரை ஆட விடுவீங்களா… மாட்டீங்களா?’ CSK அதிகாரி விளக்கம்

இம்ரான் தாஹீரோ, ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இருக்கிறேனா இல்லையோ அணி வெல்ல வேண்டும். அதற்காக நான் கூல் ட்ரிங்ஸ் சுமந்துவரக் கூட தயார்” என்பதாக ட்வீட் செய்திருக்கிறார். அணியின் வெற்றிக்காக உண்மையாகச் செயல்படும் இம்ரான் தாஹீர் சுழல் வீச்சை விரைவில் மைதானத்தில் பார்க்கலாம் என்றே நம்புவோம்.