இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு சீமந்தம் செய்யலாமா?

 

இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு சீமந்தம் செய்யலாமா?

தாய் கருத்தரித்த 7வது 9வது மாதங்களில் சீமந்தம் செய்யப்படும். சிலர் ஒற்றைப்படை மாதங்களில் செய்ய வேண்டும் என்று சொல்வர், சிலர் இரட்டை படை மாதங்களில் செய்வது நல்லது என்று கூறுவர். முதல் குழந்தைக்கு மட்டும்தான் சீமந்தம். அடுத்தடுத்த குழந்தைகளுக்கு சீமந்தம் செய்யத் தேவையில்லை என்று சொல்வார்கள். அது ஏன் முதல் குழந்தைக்கு மட்டும், அடுத்து அடுத்த குழந்தைகளுக்கும் சீமந்தம் செய்வோம் என்று சிலரும் செய்வார்கள். இப்படி சீமந்தம் தொடர்பாக பல குழப்பங்கள் உள்ளன.

இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு சீமந்தம் செய்யலாமா?

வேதத்தின் படி பும்ஸவனம், சீமந்தம் ஆகியவை செய்யப்பட வேண்டும். நான்காவது மாதத்தில் பும்ஸவனம் செய்யப்பட வேண்டும். இது பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்று செய்யப்படுவது ஆகும். 4, 6 அல்லது 8வது மாதத்தில் கர்ப்பிணியை அமர வைத்து அவள் நாபி முதல் உச்சந்தலை வரை முள்ளம்பன்றி முன்னாள் நேர்க்கோடு வரைவார்கள். அப்படி கோடு வரையும் போது மந்திரங்கள் சொல்லப்படும்.

வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு பாதிப்பும் இன்றி, நல்லபடியாக வளர்ந்து சுகப் பிரசவமாக வர வேண்டும். எந்த ஒரு துஷ்ட சக்தியைக் கருவில் உள்ள குழந்தையை நெருங்கக் கூடாது என்பதற்காகத்தான்.

சீமந்தம் என்பது முதல் குழந்தையை பெற்றெடுக்கும்போது செய்யப்படுவது ஆகும். முதல் குழந்தைக்கு செய்யப்படும் சீமந்தம் மந்திரங்கள், அதன் பிறகு பிறக்கும் அனைத்துக் குழந்தைக்கும் பொருந்திவிடும். எனவே, இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு என்று சீமந்தம் செய்வது தேவையில்லாதது, பொருளற்றது என்கின்றனர் வேத நிபுணர்கள்.

சீமந்தம் செய்வதற்கு முன்பு குழந்தை பிறந்துவிட்டது என்றாலும் கவலையில்லை. அந்த குழந்தையை தாயின் மடியில் வைத்து சீமந்தம் செய்துவிடலாம். அதைவிடுத்து, இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு செய்வது எல்லாம் கூடாது என்கிறது சாஸ்திரம்.

வளைகாப்பு என்பது நம் ஊரில் காலம் காலமாக நடைபெறுவது. இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. கர்ப்பிணிக்கு ஜடை பின்னி, அழகூட்டி, அவரது இரு கைகளிலும் வளையல் மாட்டி, அவருக்கு விருப்பமான உணவை வழங்கி அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல் வளைகாப்பு. கர்ப்பிணியை மன மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் அவருக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கையாகும்.