உள்ளாட்சி தேர்தல் எப்போது?

 

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

By subas Chandra bose
தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட, 9 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள, 27 மாவட்டங்களில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37,830

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 45,336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது, இரண்டாம் கட்டத் தேர்தல் 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு நடைபெற்றது. இதில் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வாக்குகள் பதிவானது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?


இது தவிர மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட, 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலும், அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நிலுவையில் உள்ளது. தற்போது கேரள மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் மீதமுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, சட்டசபை தேர்தலுடன் நடத்ததுவதற்கு தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் சேர்ந்து நடத்தினால், பாதுகாப்பு பணிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்களின் பணிச்சுமைகள் குறையும் என்பதோடு செலவுகளும் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.