கொரோனா தடுப்பு மருந்து எப்போது? – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

 

கொரோனா தடுப்பு மருந்து எப்போது? – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

அமெரிக்காவில் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கிறது. அதற்காக இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்து எப்போது? – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

அமெரிக்காவில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு பொது விவாதங்களில் கலந்துகொள்வது வழக்கம். அதன்படி, அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது. இரண்டாம் விவாதம் நேற்று நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் கடும் விவாதம் சென்றது. காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், அயல்நாடுகலோடு உறவு உள்ளிட்ட பல கேள்விகளை ஜோ பைடன் எழுப்பினார். அவற்றிற்கு சமாளித்து பதில் அளித்தார் ட்ரம்ப்.

கொரோனா தடுப்பு மருந்து எப்போது? – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

அதிபர் ட்ரம்ப்க்கு சிக்கலாக இருக்கும் ஒரு விஷயம். கொரோனா பரவலைத் தடுப்பதில் அலட்சியம் காட்டியது. இதனால், அமெரிக்காவில் 2 லட்சத்துக்கு அதிகமானவர்களைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தினசரி இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை ஒட்டி இருந்து வருகிறது. இதுகுறித்து ஜோ பைடன் முன் வைத்த கேள்விக்கு, “இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவுக்கு வந்துவிடும். அதை விரைவாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, நவம்பர் 1-ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என்று கூறியிருந்தார். பின்பு, இவ்வருட இறுதி என்று கெடு குறித்தார். இப்போது சில வாரங்கள் என்றிருக்கிறார். எதுதான் நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.