12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  எப்போது?

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . நேற்று ஒரே நாளில் தொற்று பரவல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து. இதனால் தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன . நாளை இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர உரடங்கும் அமலுக்கு வருகிறது. இந்த சூழலில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே 3ஆம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  எப்போது?

ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.இதன் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொது தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் , மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மற்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது அத்துடன் பொதுத்தேர்வு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  எப்போது?

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும் 15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன் தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனாவை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தற்போது நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.