கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீருவோம்! மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு!!

 

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீருவோம்! மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு!!

ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 31 வரை நடப்புக் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைக்கு இருக்கும் சூழலில் இது சாத்தியம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாணவர்களுக்கு இது செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க யுஜிசி திட்டமிட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா என்பது மிகப்பெரும் குழப்பமாக உள்ளது.

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீருவோம்! மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு!!

இந்நிலையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே தான் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது எனக்கூறிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

 

.