டிசம்பர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் எப்போது தெரியுமா?

 

டிசம்பர்  மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் எப்போது தெரியுமா?

டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் தொடர்பான் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில்கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இலவச ரேஷன் பொருட்களை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கி வருகிறது. அதில் அரிசி, சர்க்கரை, பருப்பு,சமையல் எண்ணெய் போன்றவை அடங்கும்.

டிசம்பர்  மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் எப்போது தெரியுமா?

அத்துடன் இந்த அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான டோக்கனும் வீடுகளைத் தேடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று அளிக்கப்ப்படும் இந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம், இடம் ஆகியவைகுறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் மக்கள் கூட்டம் கூடாமல் தொற்றை தடுக்க வழி வகுக்கும் என்று நம்பப்பட்டது. இந்த முறையே அடுத்தடுத்த மாதமு ம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர்  மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் எப்போது தெரியுமா?

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் டோக்கன் மூலம் டிசம்பர் 2,3,5 ஆகிய தேதிகளிலும், 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் பொருட்களை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதில் நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு என துவரம் பருப்புக்கு பதில் 5 கிலோ கொண்டைக்கடலை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.