தியேட்டர்கள் திறப்பது எப்போது? மத்திய அரசு இன்று ஆலோசனை!

 

தியேட்டர்கள் திறப்பது எப்போது? மத்திய அரசு இன்று ஆலோசனை!

மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கை மத்திய அரசு நீக்கியது.

தியேட்டர்கள் திறப்பது எப்போது? மத்திய அரசு இன்று ஆலோசனை!

இதன் மூலம் கோயில்கள் திறப்பு, படப்பிடிப்புக்கு அனுமதி என பல தளர்வுகள் கிடைத்தது. ஆனாலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தியேட்டர்கள் திறப்பது எப்போது? மத்திய அரசு இன்று ஆலோசனை!

இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் தியேட்டர் திறப்பு குறித்து மத்திய உள்துறை செயலாளருடன் இவர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.