பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் திறப்பது குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், “பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துதல் அவசியம். காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்திட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக் காலத்தில் அவசர கால முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

பருவமழை காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு?; மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் குறு மற்றும் சிறு வியாபாரிகள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.