கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

 

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் 51ஆவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளில் புகழ்ந்து எழுதுவதைக் காட்டிலும், நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் அவருக்குண்டான பொறுப்பை எடுத்துக் கூறுவது தான் சிறந்ததாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி விட்டு சட்ட மாமேதை இப்படி சொன்னார்: நான் சட்டங்களை இயற்றிவிட்டேன்; அதனை எப்படி கையாள்வது என்பது ஆட்சியாளர்களின் கைகளில் தான் இருக்கிறது என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசி. 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துகொண்டிருப்பதைச் சரியாக கணித்திருக்கிறார்.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

ஒற்றை தலைமையின் கீழ் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் என்ற தேசியவாத கருத்துருவாக்கம் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை சீர்குலைத்து வருகிறது. இந்த்துத்துவத்தின் கோரப்பிடிகளில் சிக்கி நாட்டு மக்களின் உரிமைகள் பாழ்படுகின்றன. இந்திய நாட்டின் ஒவ்வொரு அழகுகளையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிநாதம் தீவிர தேசியவாதம். அதிகாரத்துக்கு வெளியே மக்களைப் பிரித்தாளும் கொள்கையைப் பயன்படுத்தி ரூட் போட்டுக் கொடுக்கிறது ஆர்எஸ்எஸ். அதன் அரசியல் கிளையான பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து சட்டங்களைத் திருத்தி பக்குவமாக செய்கை செய்கிறது.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

ஆம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியலமைப்பு சட்டத்திற்கே நெருக்கடியான காலக்கட்டமாக இது இருக்கிறது. இருப்பினும் இது ஜனநாயகம். மக்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்குள் கொஞ்சமேனும் போராட்டக்குணம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிஏஏ, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை சமீபத்திய உதாரணமாகக் கூறலாம். அந்தப் போராட்டங்களையும் முறியடிக்க பல்வேறு அடக்குமுறைகளை அரசு ஏவி விடுகிறது. ஆனாலும் மக்கள் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பது நம்பிக்கையளிக்கிறது. என்ன தான் வெளியிலிருந்து போராடினாலும் ஆட்சி அதிகாரமே நம்முடைய நிலைமையை மாற்றும்.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

அதற்கு சரியான தலைவர் இல்லை என்பதே இங்கே எதார்த்தம். மதம் என்ற உணர்வைத் தூண்டி, பிரித்தாளும் கொள்கையை சாதுர்யமாகப் பயன்படுத்தி அனைவரையும் ஒற்றைத் தலைமையின் கொடைக்குள் ஒருங்கிணைக்கும் வேலை எதிர்த்தரப்பில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. மோடி என்ற ஒரு பிம்பம் போதும் அவர்களுக்கு. அதன் மீது மாயையைக் கட்டமைத்து மக்களைத் தேசியவாதத்தின் பக்கம் இழுத்துச் செல்கின்றனர். ஆனால் அவற்றை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளோ உதிரிகளாகப் பிரிந்து பிரிந்து இருக்கிறார்கள். எப்போதும் பலமான வில்லனுக்கு நிகரான சக்தியைப் பெற்றுள்ள ஹீரோவையே மக்களுக்குப் பிடிக்கும். மாறாக ஹீரோ யாரென்றே தெரியாவிட்டால் வில்லன் பக்கமே மக்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள். அது தான் கடந்த பிரதமர் தேர்தலில் நடந்தது.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

ஏற்கெனவே பிரதமராக இருந்து எதிர்ப்பலைகள் இருந்தாலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீர்க்கமாக முன்னிறுத்தினார்கள். ஆனால் ஜனநாயக சக்திகள் என்ன செய்தார்கள்? அவர்கள் கூட்டணி அமைத்தார்கள் சரி, யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார்கள்? தெற்கில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். சர்வபலம் பொருந்திய எதிரிக்கு முன்னால் யார் தலைவர் என்றே சொல்லாவிட்டால் மக்கள் மத்தியில் எப்படி ஆதரவு பெருகும்? ஆகவே முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மோடியே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றினார்.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

அதற்குப் பின் ராகுல் காந்தி என்ன செய்தார்? தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஒரு பக்கம் சரி என்று சொன்னாலும், தோல்விகளில் வாடியிருக்கும் தொண்டர் படைகளிடம் தலைவன் என்பவன் தைரியமாக முன்னின்று இன்று இல்லாவிட்டால் என்றோ ஒரு நாள் நாம் வெற்றிபெறுவோம் என முழக்கமிட வேண்டும். அதற்குப் பின் எங்கே தோற்றோம் என்பதைக் களைந்து அதற்குண்டான தீர்வை நோக்கி நகர வேண்டும். அப்போது தான் எழுச்சி பிறக்கும். ராஜினாமா செய்துவிட்டால் நிலைமை மாறப் போவதில்லை. காங்கிரஸ் மட்டுமில்லை ஜனநாயகத்தின்பால் பற்று கொண்ட அத்துனை மக்களும் ராகுலின் செயல்பாடுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

கோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்?

இது இரு சித்தாத்தங்களுக்கு எதிரான போர். அதனை ராகுல் அறியாமல் இருக்க இவர்கள் சொல்லும் பப்பு கிடையாது. சித்தாந்தத்தின் வலிமை என்ன? என்ன பேச வேண்டும்? ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் என்னென்ன என அனைத்தும் அறிந்தவர் அவர். இவ்வளவு தெரிந்தும் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ராகுலை பப்பு என்று எதிர்த் தரப்பினர் அழைக்கலாம். உண்மையில் கோலியாத்தை வெல்லும் சக்தி கொண்ட தாவீது ராகுல் காந்தி தான். மக்கள் அவரிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். கவணை சுழற்றி கோலியாத்தை சாயுங்கள் ராகுல் என்பதே அனைவரின் வேண்டுகோளும். அவற்றை இந்தப் பிறந்தநாளுக்குப் பிறகாவது பூர்த்தி செய்வாரா?