தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன . கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது . இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. இந்த சூழலில் இன்று முதல் வருகிற 28-ஆம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

அதன்படி தொற்று குறைந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்திட்ட இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. பேருந்துகள் சேவை, கடைகள் திறப்பு என அனைத்திற்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம், கல்வி தொலைக்காட்சியில் வீடியோக்கள் மூலம் கல்வி கற்கும் முறை என அனைத்தும் தமிழக அரசால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் வருகின்ற ஜூலை மாதம் முதல் படிப்படியாக திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா 3 ஆம் அலை 6 முதல் 8 வார காலத்திற்குள் பரவக் கூடும் என எய்ம்ஸ் தலைவர் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக தெலுங்கானாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.