சென்னை மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பது எப்போது? – ராமதாஸ் வேதனை

 

சென்னை மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பது எப்போது? – ராமதாஸ் வேதனை

சென்னை மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பது எப்போது? – ராமதாஸ் வேதனை
சென்னையில் மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடி வருவதாகவும், முகக் கவசம், சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகளைத் தவிர்த்து வருவதாகவும் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பது எப்போது? – ராமதாஸ் வேதனைஇது தொடர்டபாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் இளைஞர்கள் கூட்டமாக முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடுவதாக தெரிகிறது. இது கொரோனா நோய்ப்பரவலுக்கே வழிவகுக்கும். இதை காவல்துறையினர் தடுக்க வேண்டும்!

http://


ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கூட சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றை அங்குள்ள மக்கள் தானாக முன்வந்து கடைபிடித்தனர்.

http://


அதனால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் நமது மக்கள் விதிகளை கடைபிடிப்பது எப்போது? கொரோனா கட்டுக்குள் வருவது எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.