ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாத ஸ்மார்ட்போன்களே இருக்க முடியாது. செய்தி பரிமாற்ற செயலிகளில் அத்தியாவசிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த நிலையில், ஜனவரி 1 முதல் வாட்ஸ் அப் சேவை சில போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வரும் இயங்குதளங்களுக்கு அப்டேட் கிடைக்காது என்பதால் வாட்ஸ்அப் இயங்காது. 2021 ஜனவரி 1 முதல் சில மாடல் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு அப்டேட் கிடைக்காது. எனவே அந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது. குறிப்பாக அடுத்த ஆண்டு முதல் பழைய வெர்சன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயல்படாது.

ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

குறிப்பாக ஆண்ட்ராய்ட் 4.0.3 இயங்கு தளத்துக்கு அப்டேட் கிடைக்காது என்பதால், அந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஐஓஎஸ் 9 க்கு முன்னர் உள்ள இயங்குதளதிலும் வாட்ஸ்அப் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

ஆப்பிள் 4 போன்களுக்கு அப்டேட் அடுத்த சில நாட்களில் நிறுத்தப்படௌள்ளது. அதனால் அந்த போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. இது தவிர ஐபோன் 4s, ஐபோன் 5, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் 6s மாடல்களுக்கும் அப்டேட் நிறுத்தப்பட உள்ளன. இதனால் அந்த இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயல்படாது.

ஜனவரி 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் போன்களை பொருத்தவரை, ஹெச்டிசி டிசையர், மோட்டரோலா ட்ராய்டு ரேஸர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக் மற்றும் சாம்சங் கேலக்ஸி S2 மாடல்களுக்கும் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வருகிறது. ஜியோபோன், kaiO5.1 இயங்குதளத்தில் போன் செட்டிங்குகளை மாற்றுவதன் மூலம் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் கண்விழித்தால்தான் பலருக்கு அந்த நாள் நல்ல நாளாக அமையும். அப்படி இரண்டற கலந்துவிட்ட சேவையை தவிர்க்காமல் இருக்க வேண்டும் எனில், இந்த போன்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.