Home தமிழகம் புதிய பாலிசிகளை பயனர்கள் ஏற்றுக்கொள்ள தந்திரம் செய்யும் வாட்ஸ்அப் - மக்களே உஷார்!

புதிய பாலிசிகளை பயனர்கள் ஏற்றுக்கொள்ள தந்திரம் செய்யும் வாட்ஸ்அப் – மக்களே உஷார்!

டிஜிட்டல் தளங்களில் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. புதிய கொள்கைகளை அதன் பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8ஆம் தேதிக்குப் பின் அவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற தகவலை வாட்ஸ்அப் நிர்வாகம் விடுத்தது. இதனைத் தங்களது பயனர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று எண்ணிய வாட்ஸ்அப்புக்கு எலான் மஸ்க் மூலம் வந்தது அபாய எச்சரிக்கை.

புதிய பாலிசிகளை பயனர்கள் ஏற்றுக்கொள்ள தந்திரம் செய்யும் வாட்ஸ்அப் - மக்களே உஷார்!
WhatsApp delays updated privacy policy after confusing users | Technology  News,The Indian Express

அதாவது பயனர்களின் தரவுகளைப் பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதே அக்கொள்கையின் பிரதான நோக்கம். கூடவே ஆன்லைன் வர்த்தகம் வேறு கொடி கட்டி பறப்பதால் அதற்குள்ளும் நுழைந்து பெத்த லாபம் பார்க்க வேண்டும் என்பது வாட்ஸ்அப்பின் இரண்டாவது நோக்கம். இதனால் தங்களது ரகசியங்கள் கசியக் கூடும் என்று உணர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் அதனை டெலிட் செய்து சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு தாவினர். இதனால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் இழந்தது.

WhatsApp to try again to change privacy policy in mid-May | WhatsApp | The  Guardian

இதனை உடனே சரிசெய்ய புதிய தனியுரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேதியை மே மாதம் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. அந்த அறிவிப்பின்போது கூட அக்கொள்கைகள் நீக்கப்படும் என வாட்ஸ்அப் கூறவில்லை. மாறாக நேரம் கொடுக்கிறோம் அதுவரையில் கொள்கைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் என்றே க்கு வைத்து பேசியது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் பகிரப்படாது என்று உறுதியளித்தாலும் பயனர்கள் நம்ப தயாராக இல்லை. இப்போதும் திருத்தப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனர்களை வற்புறுத்தி வருகிறது.

WhatsApp forces users to accept new terms of service, privacy policy

இதனிடையே இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில் மத்திய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill) சட்டமாக்குவதற்குள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் துடிக்கிறது. இதற்காக பயனர்களை ஏமாற்றி கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

WhatsApp's new privacy policy delayed until May 15

புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனர்களுக்கு நோட்டிபிக்கேஷன்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இது இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது. ஆகவே இதுதொடர்பான நோட்டிபிக்கேஷன்களை பயனர்களுக்கு அனுப்பவதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. இதனை மறுக்கும் வாட்ஸ்அப் தரப்பு வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு மனு தாக்கல் செய்துள்ளது.

புதிய பாலிசிகளை பயனர்கள் ஏற்றுக்கொள்ள தந்திரம் செய்யும் வாட்ஸ்அப் - மக்களே உஷார்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews