‘வாட்ஸ் அப்’- நிரந்தர மியூட் வசதி !

 

‘வாட்ஸ் அப்’- நிரந்தர மியூட் வசதி !

வாட்ஸ்அப் நிறுவனம், “சாட்” வசதியை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் 8 மணி நேரம், 1 வாரம் என இந்த வசதி கிடைத்த நிலையில், தற்போது நிரந்தரமான மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் இணைய வசதியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘வாட்ஸ் அப்’- நிரந்தர மியூட் வசதி !

இந்த புதிய வசதியின் மூலம், தேவையற்ற செய்திகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த புதிய வசதியை அறிந்த நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகின்றனர்.

‘வாட்ஸ் அப்’- நிரந்தர மியூட் வசதி !

இந்த வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு நன்றி என பலரும் குறிப்பிட்டுள்ளனர். காலையில் குட்மார்னிங் சொல்லும் செய்திகளில் இருந்து விடுதலை என மீம்ஸ்கள் பறக்கின்றன. கடந்த சில நாட்களாக சோதனை ரீதியாக இந்த வசதியை அளித்து வந்த நிலையில், தற்போது அதிகார பூர்வமாக இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் போன்ற செயலிகளில் உள்ளதுபோல லாக் அவுட் வசதியும் வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் . இந்த மியூட் வசதியை பயன்படுத்தும்பட்சத்தில், செய்தி வந்தால், போன் அலார்ட் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.