கோவை ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

 

கோவை ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

கோவை

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக ஆட்சியரிடம் தெரிவிக்கும் விதமாக வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டங்களில் பங்கேற்று தெரிவிப்பது வழக்கம். தற்போது, கொரோனா பரவல் காரணமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

கோவை ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

மேலும், வைரஸ் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வாட்ஸ் அப் மூலம் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி, பொதுமக்கள் 94875 70159 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களுடைய கோரிக்கைகளையும், புகார்களையும் நேரடியாக தெரிவிக்கலாம். இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.