‘தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள்” ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஜூக்கர்பெர்க் தகவல்

‘தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள்” ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஜூக்கர்பெர்க் தகவல்

தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி ( 100 பில்லியன்) மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

‘தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள்” ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஜூக்கர்பெர்க் தகவல்

கடந்த 2014ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியது. அதன்பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் வாட்ஸ்அப், ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கில் புதிய வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில்,தினந்தோறும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி ( 100 பில்லியன்) மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

‘தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள்” ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஜூக்கர்பெர்க் தகவல்

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது ; உலகெங்கிலும் 250 கோடி மக்கள், ஃபேஸ்புக் மற்றும் அதன் நிறுவனம் சார்ந்த ஆப்ஸ்களை தினந்தோறும் பயன்படுத்துவதாகவும், அதில் குறிப்பாக வாட்ஸ்அப்-ஐ மட்டும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்தார். மேலும், பேஸ்புக் மற்றும் அதன் நிறுவனம் சார்ந்த ஆப்ஸ்களுக்கு மட்டும் 1 கோடிக்கும் அதிகமான விளம்பரதாரர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், 2017ம் ஆண்டில் 6300 கோடி மெசேஜ்கள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 2018 புத்தாண்டின் போது 7500 கோடியை தொட்டது என்று தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு புத்தாண்டின் போது முதல்முறையாக 10 ஆயிரம் கோடி என்றளவை அடைந்ததாக கூறிய அவர், தற்போது, தினமும் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் அனுப்ப ப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

‘தினமும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி மெசேஜ்கள்” ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஜூக்கர்பெர்க் தகவல்

வாட்ஸ்அப்பை 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதே இந்தளவு மெசேஜ்கள் அனுப்பப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறிய அவர், உலகில் எந்த ஒரு செயலியிலும் வாட்ஸ் அப் அளவிற்கு மெசேஜ்கள் அனுப்பப்படுவது கிடையாது என்று தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்