அனிமேஷன் ஸ்டிக்கர்களை பரிசோதிக்கும் வாட்ஸ்அப்

 

அனிமேஷன் ஸ்டிக்கர்களை பரிசோதிக்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பீட்டா ஆப்களில் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பீட்டா மற்றும் ஐ.ஓ.எஸ் பீட்டா பதிப்புகளில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆப்களில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் ஆகும்போது சில ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப்பில் தானாக கிடைக்கும். மேலும் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்களை மூன்றாம் தர இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்பிலும் இந்த அனிமேஷன் ஸ்டிக்கர் அம்சம் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அனிமேஷன் ஸ்டிக்கர்களை பரிசோதிக்கும் வாட்ஸ்அப்

முன்னதாக பேஸ்புக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பல அனிமேஷன் பொம்மைகள் மிகவும் வேடிக்கையான பாவனைகளை செய்யும். இதனால் பேஸ்புக்கில் கமெண்ட் பகுதிகள் புத்துயிர் பெற்றன. விதவிதமான அனிமேஷன் ஸ்டிக்கர்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.