ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

 

ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் பேமண்ட் செயலியை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கான வேலைகளை பேஸ்புக் நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற பேஸ்புக் ஃபியூல் 2020 இணையவழி மாநாட்டில் கலந்து கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பெர்க், இந்தியாவில் வாட்ஸப் பேமண்ட் செயலிகளை விரிவுபடுத்த பேசி வருவதாக குறிப்பிட்டார்.

ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் அமேசான் உள்ளிட்ட தளங்களில் நேரடியாக பொருட்களை வாங்க முடியும். இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மேலும் பல வசதிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியுடன் பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜூகர்பெர்க் உரையாடி மகிழ்ந்தார். அப்போது இருவரும் பல தொழில்நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வமாக இருந்ததை பகிர்ந்து கொண்டனர்.

ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வாட்ஸ் அப் பேமண்ட் செயலியை செயல்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜியோ பேமண்ட் பேங்க் மற்றும் இதர நான்கு வங்கிகளின் சேவைகளும் வாட்ஸ் அப் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஜியோ பேமண்ட் பேங்குடன் கைகோர்க்கும் வாட்ஸ்அப் !

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை ரூ.43,574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் கடந்த எப்ரல் மாதத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஜியோ ஸ்மார்ட்போன் வழியாக தங்களது பேமண்ட் பேங்க் செயல்களை வளர்ப்பதற்கு பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் பேமண்ட் செயலியை விரிவாக்கம் செய்வதன் மூலம் கூகுள் பே செயலிக்கு போட்டியாக களம் இறங்க பேஸ்புக் முயற்சி செய்து வருகிறது. தவிர பேடிஎம் மற்றும் போன் பே போன்ற செயலிகளுக்கும் போட்டியாக அமையும்.