புதுச்சேரியில் பள்ளிகளை மூடக்கோரி வாட்ஸ்அப் குழுவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் பள்ளிகளை மூடக்கோரி வாட்ஸ்அப் குழுவினர் ஆர்ப்பாட்டம்

காரைக்கால்

புதுச்சேரி மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை உடனடியாக மூடக் கோரி காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாட்ஸ்அப் போராளி குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் பள்ளிகளை மூடக்கோரி வாட்ஸ்அப் குழுவினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிகளை மூடக்கோரி அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புதுச்சேரி அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதும், பள்ளிகளை மூட அரசு முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, காரைக்கால் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாட்ஸ்அப்

புதுச்சேரியில் பள்ளிகளை மூடக்கோரி வாட்ஸ்அப் குழுவினர் ஆர்ப்பாட்டம்

போராளிகள் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பள்ளிகளை மூடக் கோரியும், மாணவர்களின் உயிரை காக்க கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.