“வாட்ஸ்அப் குரூப்களில் பிறர் ஷேர் செய்யும் போஸ்டுக்கு அட்மின் பொறுப்பில்லை” – மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி!

“வாட்ஸ்அப் குரூப்களில் பிறர் ஷேர் செய்யும் போஸ்டுக்கு அட்மின் பொறுப்பில்லை” – மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி!

வாட்ஸ்அப் குழுக்களில் பிற உறுப்பினர்கள் பகிரும் செய்திகளுக்கும் அவர்கள் எழுதும் செய்திகளுக்கும் குழுவின் அட்மின் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

“வாட்ஸ்அப் குரூப்களில் பிறர் ஷேர் செய்யும் போஸ்டுக்கு அட்மின் பொறுப்பில்லை” – மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி!

2016ஆம் ஆண்டு மனுதாரரான கிசோர் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நபர் ஒருவர் பெண்களை அவமதிக்கும் விதமாக செய்தி அனுப்பியிருக்கிறார். பாலியல் ரீதியாகவும் பேசியிருக்கிறார். குழுவில் அந்நபருக்கு எதிராக எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அட்மின் கிசோர் மீது கோண்டியா மாவட்ட காவல் துறையில் குழுவில் இருக்கும் மற்றொரு நபர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கிசோர் மீது எஃப்ஐஆர் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

“வாட்ஸ்அப் குரூப்களில் பிறர் ஷேர் செய்யும் போஸ்டுக்கு அட்மின் பொறுப்பில்லை” – மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி!

இதனை ரத்துசெய்யக் கோரி கிசோர் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு நீதிபதிகள் ஹக், போர்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது பேசிய நீதிபதிகள், “வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்குவது அட்மின்களின் வேலை. ஒன்று அல்லது மூன்று அட்மின்கள் ஒரு குழுவில் இருப்பார்கள். அட்மின்களுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் அவர்களை நீக்குவதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.

Group Admin What's On - Home | Facebook

மற்றபடி அவர்களும் ஒரு உறுப்பினர் தான். உறுப்பினர் ஒருவர் பதிவிடும் செய்திகளுக்கு அவர்கள் பொறுப்பாக முடியாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் அந்தச் செய்தியைப் பதிவிட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது” என்று கூறி கிசோர் மீதான வழக்குகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.