kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வாட்ஸ் அப் உடல்நலத்துக்கு நல்லது- ஆய்வில் தகவல்

Whatsapp
Whatsapp
Loading...

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.

வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. 


இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்பாடு உடல்நலனுக்கு நல்லது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இண்டர்னேஷ்னல் ஜார்னல் ஆஃப் ஹியூமன் கம்யூட்டர் ஸ்டடிஸ் இளைஞர்களை வைத்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது குரூப் சாட்டிங்  வசதியால் ஒருவர் தனிமையிலிருந்தாலும், தனிமையிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இல்லாதவர்களுடன் பேச முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் வாட்ஸ் அப் குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் வாட்ஸ் அப் நம் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தையே தருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.