மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

 

மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிகளையும் இலவசமாகக் கொடுக்க அச்செயலியின் ஓனர்கள் யாரும் தர்மசத்திரம் நடத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு அச்செயலிகள் பணம் கொழிக்கும் மரம் அவ்வளவே. அதற்காக அவர்கள் அனைத்துப் பிரயத்தனங்களையும் செய்வார்கள்.

மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?
மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

இவ்விஷயத்தில் பேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் கிஞ்சித்தும் சளைத்தவர் அல்ல. பேஸ்புக் போர் அடித்தால் அதற்கான மாற்று தன்னிடமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இன்ஸ்டாவை விலைக்கு வாங்கினார். வாட்ஸ்அப்பையும் விலைக்கு வாங்கினார். இதனால் போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் உட்செரித்து விடுவதாக எக்கச்சக்கமான கேஸ்களையும் வாங்கி வாய்தா சென்றுகொண்டிருக்கிறார்.

WhatsApp's new privacy policy delayed until May 15

பேஸ்புக், இன்ஸ்டாவைப் பொறுத்தவரை கொள்ளை லாபம் பார்த்துவிட்டார். ஆனால் உரையாடல் செயலியான வாட்ஸ்அப் மூலம் இன்னும் லாபம் பார்க்கவில்லை. இப்போதைக்கு அதைத் தர்மசத்திரமாகவே நடத்திவருகிறார். இச்சூழலில் தான் வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைகளை மாற்றும் முடிவையும் அவர் எடுத்தார். அதாவது பயனர்களின் தரவுகளைப் பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதே அக்கொள்கையின் பிரதான நோக்கம். கூடவே ஆன்லைன் வர்த்தகம் வேறு கொடி கட்டி பறப்பதால் அதற்குள்ளும் நுழைந்து பெத்த லாபம் பார்க்க வேண்டும் என்பது இரண்டாவது நோக்கம்.

மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

இந்த அடிப்படையிலேயே ஜனவரி மாதம் புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்.8ஆம் தேதிக்குப் பின் அவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற தகவலை வாட்ஸ்அப் நிர்வாகம் விடுத்தது. இதனைத் தங்களது பயனர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று எண்ணிய வாட்ஸ்அப்புக்கு எலான் மஸ்க் மூலம் வந்தது அபாய எச்சரிக்கை. போதாக்குறைக்கு சிக்னல், டெலிகிராம் செயலியும் ஊடு கலைத்துவிட விவகாரம் பெரிதாய் மாறிப் போனது. இதனால் வாட்ஸ்அப் பல லட்சக்கணக்கான பயனர்களை இழந்தது.

மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

இதனை உடனே சரிசெய்ய புதிய தனியுரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேதியை மே மாதம் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. அந்த அறிவிப்பின்போது கூட அக்கொள்கைகள் நீக்கப்படும் என வாட்ஸ்அப் கூறவில்லை. மாறாக நேரம் கொடுக்கிறோம் அதுவரையில் கொள்கைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் என்றே இக்கு வைத்து பேசியது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் பகிரப்படாது என்று உறுதியளித்தாலும் பயனர்கள் நம்ப தயாராக இல்லை.

ஏனென்றால், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக்கின் டிராக் ரெக்கார்ட் அப்படி இருக்கிறது. கூகுளில் ஒரு பொருளைத் தேடிவிட்டு பேஸ்புக் வந்தால் நம் நண்பர்கள் போட்டிருக்கும் போஸ்ட்களுக்கு முன் அந்தப் பொருள் சம்பந்தமான விளம்பரம் எட்டிப்பார்க்கும். இக்காரணமே பேஸ்புக்கின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்திருக்கிறது.

இச்சூழலில் மே 15ஆம் தேதிக்குப் பின் புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளா விட்டால் என்ன ஆகும் என்பதே நுண்ணியமாக வாட்ஸ்அப் கூறுகிறது. நீங்கள் ஒருவேளை வாட்ஸ்அப்பின் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் மே 15ஆம் தேதிக்குப் பின்பும் உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியும். ஆனால் குறிப்பிட்ட சில அம்சங்களை நீங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். உங்களுக்கு வரும் வாய்ஸ்காலை பேச முடியும், பகிரும் செய்திகளின் நோட்டிபிக்கேஷன்களைப் பார்க்க முடியும். ஆனால் அச்செய்தியைப் படிக்க முடியாது. உங்களால் யாருக்கும் செய்தியும் அனுப்ப முடியாது.

மே 15க்கு பின் வாட்ஸ்அப் விரிக்கும் நூதன வலை! – பிரைவசி கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன ஆகும்?

குறிப்பாக, இந்த வசதிகள் கூட குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் உங்கள் கணக்கு நீக்கப்பட்டுவிடும். இதுவே வாட்ஸ்அப் விரித்திருக்கும் நூதனமான வலை. குறிப்பிட்ட சில அம்சங்களை கட் பண்ணிவிட்டால் எப்படியும் பயனர்கள் நம்மிடம் ஓடிவந்து கொள்கைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே வாட்ஸ்அப்பின் நச்சு எண்ணம். வலையில் சிக்காமல் எப்படி தப்பிப்பது என்பது குறித்து யோசித்துச் செயல்படுங்கள்.