30 லட்சம் இந்தியர்களின் அக்கவுண்ட்கள் முடக்கம் – வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை!

 

30 லட்சம் இந்தியர்களின் அக்கவுண்ட்கள் முடக்கம் – வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை!

“சமூக ஊடகங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை மத்திய அரசு வரவேற்கிறது. அதேசமயம் நாகரிகமற்ற முறையில் வெளியாகும் சில உள்ளடக்கங்கள் குறித்த புகார்கள் எங்களுக்கு தொடர்ந்துவந்துகொண்டே இருக்கின்றன. பயங்கரவாதிகளும் இதைப் பயன்படுத்துவதால் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. அதேபோல போலிச் செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆகவே புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வகுத்திருக்கிறோம்” என அப்போதைய ஐடி அமைச்சர் ரவிசங்கர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கூறியிருந்தார்.

30 லட்சம் இந்தியர்களின் அக்கவுண்ட்கள் முடக்கம் – வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை!

அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட 36 மணி நேரத்திற்குள் நீக்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு தளங்களும் புகார்களைக் கையாளும் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். பெறப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதம் அறிக்கை வெளியிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு ஐடி விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டர் தவிர வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் சொன்ன தேதியில் விதிகளுடன் உடன்பட்டன. கடும் சண்டைகளுக்குப் பின் ட்விட்டரும் உடன்பட்டது.

30 லட்சம் இந்தியர்களின் அக்கவுண்ட்கள் முடக்கம் – வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை!

தற்போது இந்த விதிகளின்படி வந்த புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 16 முதல் ஜூலை 31ஆம் தேதிவரை இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாகவே 95 சதவீத கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. ஜூன் 16 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 594 புகார்கள் வந்ததாகவும் உடனடியாக 74 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.