இந்தியாவில் புகார் அதிகாரி நியமனம் – எஸ்கேப் ஆன வாட்ஸ்அப்!

 

இந்தியாவில் புகார் அதிகாரி நியமனம் – எஸ்கேப் ஆன வாட்ஸ்அப்!

சமூக ஊடக நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும் போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள். இந்த விதிகள் பிப்ரவாரி 25ஆம் தேதியில் அறிவிக்கப்பட்டது. விதிகளுக்கிணங்க மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி மே 25ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்தது.

இந்தியாவில் புகார் அதிகாரி நியமனம் – எஸ்கேப் ஆன வாட்ஸ்அப்!

மூன்று மாத கால இடைவெளியில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. நெட்டிசன்கள் வெலவெலத்து போனார்கள். மத்திய அரசு தரப்பில் அழுத்தம் வந்ததால் ட்விட்டரை தவிர்த்து மற்ற சமூக வலைதளங்கள் புதிய விதிகளுடன் உடன்படுவதாக அறிவித்தன. ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் புகார் அதிகாரி நியமனம் – எஸ்கேப் ஆன வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் கூட அத்தனை விதிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பயனர்களின் தகவல்களைப் பகிர்வது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க புகார் பெறும் அதிகாரிகளை வாட்ஸ்அப் நியமித்திருக்கிறது. இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக பரேஷ் பி.லால் என்பவரை நியமித்துள்ளது. குறைதீர்ப்பு அதிகாரியின் முகவரியையும் வெளியிட்டிருக்கிறது. இந்த அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும்.