“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

 

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி அப்டேட் பிரச்சினை டெக் உலகில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 20 கோடி பயனர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியாவிலேயே எதிர்ப்பு குரல் எழுந்தது. இதுதான் வாட்ஸ்அப் நிறுவனத்தையும் அதன் ஓனர் மார்க் சக்கர்பெர்க்கையும் கதிகலங்க செய்தது.

அதையடுத்து அப்டேட் தேதியை தள்ளிவைத்தது, பயனர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அந்நிறுவனம் டிரெய்ன் விட்டதெல்லாம் வேறு கதை. அது அனைவரும் அறிந்த கதை என்பதால் அந்தப் பக்கம் போக வேண்டாம். குடிமக்களுக்கு பிரச்சினை என்றால் அதை களைவதே அரசின் தலையாயக் கடமை. அப்படியாக நம்முடைய அரசு வெகுண்டெழுந்திருக்கிறது.

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

14 கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு வாட்ஸ்அப் சிஇஓ வில் கேத் காரட்டுக்கு ஒரு இமெயிலை தட்டிவிட்டிருக்கிறது மத்திய அரசின் மின்னணு மற்றும் ஐடி அமைச்சகம். பயனர்களிடம் என்னென்ன தரவுகளைப் பெறுகிறீர்கள், மூன்றாம் தர நிறுவனங்களோடு வணிக நோக்கத்தோடு பகிர்கிறீர்களா உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் சட்டம் வந்தால், வாட்ஸ்அப்பின் தடமே இந்தியாவில் இருக்காது என எகிறி அடித்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

மற்றொரு புறம் மின்னணு மற்றும் ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “பேஸ்புக்கா இருந்தாலும் சரி, வாட்ஸ்அப்பா இருந்தாலும் சரி இந்திய மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட முடியாது; அனுமதிக்கவும் மாட்டோம்” என ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறார்.

தற்போது அரசின் மெயிலுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது. அதில், “நாங்கள் மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறுகிறோம். புதிய பிரைவசி அப்டேட்டில் நாங்கள் பயனர்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம். பயனர்களுடன் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

தற்போது மக்கள் வணிகத்தில் ஈடுபட விருப்பம் காட்டுவதால், நாங்கள் சில மாற்றங்களை உருவாக்கியிருக்கிறோம். மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களோடு சேர்ந்து நாங்களும் வளர்வோம் என்ற நோக்கத்திலேயே புதிய அப்டேட் செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

வழக்கம் போலவே பயனர்களின் தனிப்பட்ட மெசெஜ்களை end-to-end encryption முறையில் பாதுகாப்போம் என்று உறுதியளித்திருக்கும் வாட்ஸ்அப், “அப்டேட் குறித்த வதந்திகளை முறியடிக்கவும், மக்களிடம் தெளிவுபடுத்துவும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெரிவித்திருக்கிறது.