தலிபான்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

தலிபான்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆப்கானில் வசிக்கும் மற்ற நாட்டவர்களை அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தலிபான்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.தலிபான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது.

தலிபான்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

இந்த சூழலில்தான் பேஸ்புக் நிறுவனம் தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று அறிவித்தது. அத்துடன் தலிபான்களை புகழ்வது ,ஆதரிப்பது மற்றும் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றை செய்வோரின் கணக்குகளும் தடை செய்யப்படும் என அறிவித்தது.

தலிபான்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

இந்நிலையில் ஃபேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து தலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதால் நடவடிக்கை என ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய நிலையில் தலிபான்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.