சிங்கப் பாதையா… பூ பாதையா? ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்?

 

சிங்கப் பாதையா… பூ பாதையா? ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்?

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் தனது சொத்துகளை எல்லாம் இழந்த பிறகு, கையில் ஒரு ரூபாயோடு ரோட்டில் விடப்படுவார். அப்போது இனி சிங்கப்பாதையா, பூ பாதையா என்று முடிவெடுக்க, நாணயத்தைச் சுண்டி விடுவார். அந்த நிலை உண்மையிலேயே ரஜினி ஏற்பட்டுள்ளது.

’கட்சி தொடங்குவேன்’ என்று ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது 2017 டிசம்பரில். ஆனால், அறித்த சூட்டோடு கட்சியைத் தொடங்க வில்லை. அவர் காத்திருந்தது சட்டமன்ற தேர்தலுக்காக. ஏனெனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு இப்போதிருக்கும் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற பேச்சு எழுந்துகொண்டே இருந்தது.

சிங்கப் பாதையா… பூ பாதையா? ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்?

அதனால், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என ரஜினி நினைத்திருக்கலாம். ஆனால், பாஜகவோடு சுமூக உறவை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டதால் மீதமிருக்கும் ஆட்சிக்காலத்திற்கு பாதகமில்லாமல் நீட்டித்துவிட்டார்.

இதனால், 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டார். ஆனால், கொரோனா பேரிடர் காலம் எல்லோரையும் முடக்கி விட்டது. ரஜினியின் அரசியல் செயற்பாடுகளையும் சேர்த்தே.

இடைப்பட்ட நேரத்தில் ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என்ற பேச்சே மேலெழுந்தது. அதற்கு ஏற்றார்போல, அவருக்கு சிறுநீரக உறுப்பு சிகிச்சை மாற்றம் செய்யப்பட்ட செய்தி தாங்கிய அறிக்கை ஒன்று உலவியது. அதில் இருந்த மருத்துவ விஷயங்கள் உண்மை என்று ரஜினியே ஒத்துக்கொண்டார். எனவே, அவர் அரசியல் களத்திலிருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று டிசம்பர் 31- ம் தேதி அறிவிப்பு வரும். ஜனவரியில் கட்சித் தொடக்கம் என்று அறிவித்தார்.

சிங்கப் பாதையா… பூ பாதையா? ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்?

தான் நடித்துவந்த அண்ணாத்தே படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க ஹைதராபாத் சென்றவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து சென்னை திரும்பியிருக்கிறார். குறைந்தது 10 நாட்களாகவது அமைதியான மனநிலையில் அவர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின.

அதனால், ரஜினியின் 31-ம் நாள் அறிவிப்பு என்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், வெறும் அறிவிப்பு மட்டுமே உதவாது. பொறுப்பாளர்கள், மாநில பதவிகள், கட்சிக் கொள்கைகள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமான வேலைகள் இருக்கின்றன.

சிங்கப் பாதையா… பூ பாதையா? ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும்?

ரஜினியின் இப்போது இருக்கும் சூழலில் அதற்கு சாத்தியம் மிக மிகக் குறைவு. அவர் இல்லாமல் இந்த வேலை நடந்தால் அது ரஜினி கட்சியாக இருக்காது. எனவே, ரஜினிக்கு இருக்கும் இரு முடிவுகள்.

ஒன்று, இதே ப்ளானை இன்னும் ஒரு மாதம் ஒத்தி வைப்பது. அதாவது ஜனவரி இறுதியில் அறிவிப்பு. பிப்ரவரியில் கட்சி தொடக்கம். இரண்டு. இந்தச் சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பிப்பது சாத்தியமில்லாதது என்று ஒதுங்கிக்கொள்வது.

இரண்டில் எந்தப் பாதையை எடுப்பது என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.