kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


என்ன செய்தால் கிருஷ்ணர் மகிழ்வார்?

 கிருஷ்ணர்
கிருஷ்ணர்
Loading...

தினந்தோறும் கிருஷ்ணரின் ஆலயத்தில் சோம்பேறியாக உட்கார்ந்திருக்கும் பக்தன் ஒருவனுக்கு ஒரு நாள் சந்தேகம் எழுந்தது. நாம் தினந்தோறும் இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கிறோம். கிருஷ்ணரை அவருடைய மற்ற பக்தர்களை விட நான் தான் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், என் மீது ஏன் கிருஷ்ணருக்கு அன்பு இல்லாமல் போய் விட்டது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

krishnar

ஒரு நாள் இதையே யோசித்தப்படி, பக்தன், கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பதற்கு பழம் இல்லையே. இருந்தால் நாமும் கிருஷ்ணருக்கு பழங்களைப் படைத்து அவருடைய அன்பைப் பெறலாம்  என்று நினைத்து அமைதியாக இருந்தான். 
கிருஷ்ணர் இப்போது தனது லீலையை ஆரம்பித்தார். 
அவனை அப்படியே விடவில்லை. 
பழமில்லாவிட்டால் போகிறது; ஒரு காயாவது எனக்கு கொடு என்று அவனிடம் கேட்டார்.
காயும் இல்லையே... என்றான் பக்தன்.
கிருஷ்ணர் பார்த்தார். காய்கள் இல்லாவிட்டால் போகிறது; ஒரு பூவாவது எடுத்து வந்து கொடு என்றார்.
பூவே இல்லை. ஒரு பூ கூட கிடையாது!
சரி பூ இல்லை என்றால் பரவாயில்லை. வேண்டாம். ஒரு இலையாவது கொண்டு வாருமே என்றார். துளசி என்று கூட குறிப்பிட்டுக் கேட்காமல், ஏதாவது ஒரு இலையையாவது கொண்டு வந்து திருவடியில் சோ்க்கச் சொல்லிக் கேட்டார் கிருஷ்ணர்.
இலை கூட இல்லை  என்றான் பக்தன்.
கிருஷ்ணர் விடுவதாயில்லை. கனி,காய்,பூ, இலை எதுவுமே இல்லையா... சரி.. கொஞ்சம் தீா்த்தம் மட்டுமாவது எடுத்து  'ஓம் விஷ்ணவேநம: ' என்று சொல்லி சோ்ப்பி என்றார்.
கிருஷ்ணர் இப்படிச் சொன்னதும், பக்தனும் விடுவதாய் இல்லை.
கிருஷ்ணா... அதெல்லாம் என்னிடம் இருந்திருந்தால் இந்நேரம் நான் செய்திருக்க மாட்டேனா? என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

krishnar

தீா்த்தம் கூடவா இல்லை...?
ஆமாம். என்னிடம் தீர்த்தம் கூட இல்லையே ...
நிஜமாகவே இல்லையா....?
இல்லையே ... என்று வேகமாயச் சொன்னவானிடம்  கேட்டார் கிருஷ்ணர்.
உன் கண்கள் இரண்டிலும்  கூட நீா் இல்லையா...?
காய், கனி, பூ என்று எதையும் சமா்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளேனே என்கிற வருத்தம் இருந்தால்  இந்நேரம் உன் கண்களில் ஒரு சொட்டு கண்ணீா் கூடவா வந்திருக்காது? அது கூடவா இல்லை...?
இதற்கு அா்த்தம் என்ன...?
எதையும் சமா்ப்பிக்க முடியாத போனாலும் உள்ளம் உருகி ஒரு சொட்டுக் கண்ணீா் விட்டாலே போதும். கூடை கூடையாகப் பழங்களைச் சமா்ப்பித்ததற்கு அது சமமாகும்.
கிருஷ்ணர், நம்மிடத்திலே எதிர்ப்பார்ப்பது பூக்களையும், பழங்களையும் கிடையாது. ஆத்மார்த்தமான பக்தியையும், அன்பையும் மட்டும் தான். அப்படி அவனை நினைத்து நினைத்து உருகுவது தான் தவம்! புஷ்பம்! எல்லாமே!

2018 TopTamilNews. All rights reserved.