வீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் ?

 

வீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் ?

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பல துறைகளையும் வாட்டி வருகிறது. மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வீடு வாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்த வீடுகளின் விலைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கின்றன வீடு கட்டும் நிறுவனங்கள்.

வீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் ?

இப்போதுள்ள வாய்ப்பில், சாத்தியம் உள்ளவர்கள் வீடு வாங்கலாம் என்றால் வீட்டுக்கடன் வாங்க என்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்..

தற்போதைய சூழலில், நிலையான மாத வருமானம், அல்லது சொந்த தொழில் உள்ளவர்களுக்கு வீட்டுக்கடன் ஒப்புதல் உடனடியாக கிடைத்து விடும்.

சொந்த தொழில் செய்பவர்கள் என்றால் 24 முதல் 65 வயது வரை இருப்பவர்களுக்குத்தான் கடன் கிடைக்கும் என்றாலும் கடன் பெறுபவரின் நிதி நிலையை பொருத்து வங்கிகள் முடிவெடுக்கும்.

அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கடன் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியராக இருந்தால் அந்த நிறுவனத்தின் ஸ்திர தன்மை பொறுத்து கடன் கிடைக்கும்.

வீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் ?

கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் அந்த நிறுவனத்தில் 3 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க இருக்கவேண்டும். அவரது 3 ஆண்டு வருமான வரி படிவங்களை வங்கிகள் கவனிக்கும்.

சுயதொழில் செய்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்க்கும். அவரது வங்கி பரிவர்த்தனைகள் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக வங்கிகள் இதை எதிர்பார்க்கும்.

கடனுக்காக விண்ணப்பத்தில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த பரிவர்த்தனைகள் சோதிக்கப்படும். உங்களால் தவணை தொகை சரிவர செலுத்த முடியும் என வங்கிகள் கருத வேண்டும்.

வீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் ?

வருமானத்தில் இருந்து மாதாந்திர செலவுகளுக்கான தொகையை ஒதுக்கி விட்டு, மீதத் தொகையில் தவணை தொகையை கணக்கிட்டு கடன் கிடைக்கும்.

கொரோனா காலத்திலும் வேலை உத்திரவாதம் உள்ளவர்கள், நிலையான வருமான உள்ளவர்கள் வீடு வாங்க இது நல்ல சந்தர்ப்பம் என்கிறார்கள். வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. அப்பறம் என்ன, சொந்த வீட்டுக்கு செல்லும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியதுதானே…

அ.ஷாலினி