புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆட்சியா?

 

புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆட்சியா?

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கிலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் விதத்திலும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியது. அதற்கு அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை ராஜினாமா செய்யவைத்தது. கட்சியில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்தை முதல்வர் ஆசை காட்டி பாஜக வளைத்துப் போட்டது.

புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆட்சியா?
f

காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் சேர தயக்கம் காட்டியதால், நமச்சிவாயத்தை முன்னுதாரணமாகக் காட்டி அவர்களையும் இழுப்பதே பாஜகவின் பிளான். அந்தப் பிளான் சரியாக திட்டமிட்டபடி நடந்து தற்போது நாராயணசாமியின் அரசு கவிழ்ந்துவிட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார். ஆகவே இனி முடிவெடுக்கும் அதிகாரம் தமிழிசையிடம் மட்டுமே இருக்கிறது.

புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆட்சியா?

புதுச்சேரியில் இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் நடைபெறும் வரையிலாவது தற்காலிகமாக நாராயணசாமியை முதல்வராகச் செயல்பட அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்வாரா அல்லது பெரும்பான்மையில் இருக்கும் என்ஆர் காங்கிரஸ்-அதிமுக-பாஜக கூட்டணியால் முன்னிறுத்தப்படும் நமச்சிவாயம் தலைமையில் ஆட்சியமைக்க உத்தரவிடுவாரா என்ற பைனரி ஆப்சன்களே தமிழிசையிடம் இருக்கிறது.

புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆட்சியா?

புதுச்சேரியில் ஒரு அரசு ஐந்து வருடம் நிலைத்திருக்காமல் போவது இது முதல் முறையல்ல என்பதாலும், அங்கு ஏற்கனவே 7 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதாலும் ஜனாதிபதி ஆட்சி அமையவே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஏனேனில் , 1974ஆம் ஆண்டே 62 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கிறது. ஆனால், நமச்சிவாயம் அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமே விலகியிருக்கிறார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. இந்தக் கோணத்தில் யோசிக்கும்போது பாஜக தலைமை நமச்சிவாயத்தை முன்னிறுத்தி ஆட்சியமைக்க கோரிக்கை விடுக்கலாம் என்று தெரிகிறது. அனைத்தும் தமிழிசை கையில் இருக்கிறது; டெல்லி மேலிடம் கையில் தமிழிசை இருக்கிறார்.