கவர்னர் மாளிகையில் தர்ணா.. 25 வருஷத்துக்கு முன்னாடி கல்ராஜ் மிஸ்ரா செய்ததை திரும்ப செய்த அசோக் கெலாட்

 

கவர்னர் மாளிகையில் தர்ணா.. 25 வருஷத்துக்கு முன்னாடி கல்ராஜ் மிஸ்ரா செய்ததை திரும்ப செய்த அசோக் கெலாட்

நல்லதோ கெட்டதோ எதை நாம் செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப நடக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான் என்பதை நிரூபணம் செய்துள்ளது ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையை கூட்ட அழைப்பு விடுக்குமாறு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்காததால், கடந்த வெள்ளிக்கிழமையன்று, சட்டப்பேரவை கூட்ட அழைப்புவிடுக்கக்கோரி ராஜ்பவனில் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கவர்னர் மாளிகையில் தர்ணா.. 25 வருஷத்துக்கு முன்னாடி கல்ராஜ் மிஸ்ரா செய்ததை திரும்ப செய்த அசோக் கெலாட்

இதனையடுத்து கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில், உங்களுக்கும், உங்க துறைக்கும் கவர்னரை கூட பாதுகாக்க முடியாவிட்டால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து உங்கள் கருத்து என்ன? அதனுடன் கவர்னரின் பாதுகாப்புக்காக எந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள்? எனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு முதல்வரிடமிருந்தும் இது போன்ற அறிக்கையை நான் கேட்டதில்லை என எழுதி இருந்தார்.

கவர்னர் மாளிகையில் தர்ணா.. 25 வருஷத்துக்கு முன்னாடி கல்ராஜ் மிஸ்ரா செய்ததை திரும்ப செய்த அசோக் கெலாட்

தற்போது கவர்னராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா 25 ஆண்டுகளுக்கு முன் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து கொண்டு இருந்தார். 1995ல் உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, அப்போது மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த முலாயம் சிங் யாதவை நீக்கக்கோரி கல்ராஜ் மிஸ்ரா தனது தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் லக்னோவில் ராஜ்பவனில் மிகவும் வலுவான போராட்டத்தை நடத்தினார். அப்போது கவர்னர் மாளிகையில் கல்ராஜ் மிஸ்ரா நடத்திய போராட்டத்தின் மறுசுழற்சியாக தற்போது அவர் (கல்ராஜ் மிஸ்ரா) கவர்னராக இருக்கும் போது ராஜ்பவனில் அவருக்கு எதிராக முதல்வர் அசோக் கெலாட் தனது எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். அரசியலிலும் காலம் ஒரு சுழற்சி என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.