பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

 

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

தமிழக ரேஷன் கடைகளில் 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே ரேஷன் அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன். அதேபோல் திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூபாய் 2500 மற்றும் பச்சை அரிசி சர்க்கரை தலா ஒரு கிலோ இடம் பெற்றிருக்கும். 20 கிராம் திராட்சை ,20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் , முழு அளவு கரும்பும் பொங்கல் பரிசாக தரப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பொங்கல் பரிசு இன்று வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் இன்று முதல் காலையில் 100பேர் மாலையில் 100பேர் என பெறலாம். பொங்கலுக்கு முன் பெறாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம்.