விநாயகர் சிலை நிறுவ தடை : இந்து முன்னணியின் நிலைப்பாடு என்ன? இன்று வெளியாகும் அறிவிப்பு!

விநாயகர் சிலை நிறுவ தடை : இந்து முன்னணியின் நிலைப்பாடு என்ன? இன்று வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

விநாயகர் சிலை நிறுவ தடை : இந்து முன்னணியின் நிலைப்பாடு என்ன? இன்று வெளியாகும் அறிவிப்பு!

இதை எதிர்த்துள்ள இந்து முன்னணி கட்சியினர் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்காவிட்டால் 1.5 லட்சம் சிலையை நிறுவி வழிபடுவோம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல். முருகன், “பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல . விநாயகர் சிலை நிறுவ தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்” என்று கூறியுள்ளார்.

விநாயகர் சிலை நிறுவ தடை : இந்து முன்னணியின் நிலைப்பாடு என்ன? இன்று வெளியாகும் அறிவிப்பு!

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தங்கள் நிலைபாட்டை பின்பற்றும் என்று கூறியுள்ளதால் இந்து முன்னணி இன்று தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க உள்ளனர்.