இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

 

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

“கொரோனா” பதற்றம் ஓய்வதற்குள், இந்திய, சீன எல்லையில் போர் மூளும் அபாயம் உலகை பரபரப்படையச் செய்திருக்கிறது. தற்போது இந்தியா – சீனா எல்லையில் இரு நாடுகளுமே தங்களது படைகளைக் குவித்து வருகின்றன.
தற்போது, பதற்றம் நிலவும் நிலையில், தற்போது இந்திய ராணுவத்தின் இலக்குகள் சீனாவின் மீது திரும்பியுள்ளன. முதலில் தாக்குதல்களை தொடரக்கூடாது என்றும், எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆயுதங்களை பயன்படுத்தி பதிலடி கொடுப்பதே இந்தியாவின் தற்போதைய இலக்காக தெரிகிறது

யாருக்கு பலம் ?

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வரும் இந்த நேரத்தில் யாருக்கு பலம் அதிகம் என்ற கேள்வியே எழுகிறது. குறிப்பாக, இந்திய எல்லைக்குள் எளிதில் ஊடுருவவும் பலத்த சேதத்தையும் விளைவிக்கவும் சீனா, சுமார் 31 இடங்களில் சாலைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய எல்லைக்குள் அல்லது மலை உச்சிகளை கைப்பற்றி டாங்கிகள் அல்லது ராக்கெட்டுகள் மூலமாக தொடர்ந்து இந்திய நிலைகளை தாக்கி இந்திய படைகளுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கும்.

சீனாவின் ராக்கெட்டுகள் முதலில், டார்ஜிலிங் டேராடூன் தவாங் ஆகியவற்றை தாக்கு கூடும். போரின் முதல் வாரத்தில் மட்டும் சீனா சுமார் 20,000 முதல் 40,000 ராக்கெட்டுகளை இந்த நகரங்களின் மீது வீசலாம் என்பது கணிக்கப்படுகிறது.

முதல் இலக்குகள்

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

அதே சமயத்தில் இந்திய ராணுவத்தின் முதல் இலக்கே இந்த மலை உச்சிகள்தான். இந்த 31 இடங்களையும் இந்திய விமானப்படையின் விமானங்கள் தொடர்ந்து கண்காணிக்கும், அதோடு மலை உச்சியை கைப்பற்ற நினைத்தால் குண்டு வீசி எதிரியை அழிக்கும், அஸ்ஸாமில் உள்ள நீலாபாரி உளவு விமான தளம் அருணாச்சல் முதல் சிக்கிம் வரை உள்ள எல்லைகளையும் அம்பாலாவில் உள்ள விமான தளம் நேபாளம் முதல் காஷ்மீர் வரையும் தொடர்ந்து 24 மணி நேரம் வரையும் கண்காணிக்கும்.
அதோடு சீன எல்லை அருகே நமக்கு 31 பெரிய விமான தளங்கள் உள்ளன, இவை அனைத்துமே நவீன போர் விமானங்களான சுகோய், மிராஜ் மற்றும் மிக் ரக விமானங்களை கொண்டுள்ளன. இவற்றை வைத்து சீனாவுக்கு மிரட்டல் விடுப்பதோடு மட்டுமல்லாது சீன விமானப்படை தாக்குதல் நடத்தாதவாறு பார்த்துகொள்ளும்.
சீனாவின் விமான தளங்கள் அதிக உயரத்தில் உள்ளதால் அவர்களால் அதிக அளவு ஆயுதங்களுடன் போர் விமானங்களை இயக்க முடியாது, அது சீனாவுக்கு பலத்த அடியாக இருக்கும். இதனடிப்படையில் பார்த்தால், விமானப்படை சண்டை பற்றி கூற வேண்டுமானால், எல்லையில் இருவருக்கும் சம பலம் என்றாலும் இந்தியாவின் கை சிறிது ஓங்கியே இருக்கும்.

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

தாக்குதல் எப்படி இருக்கும் ?
போர் துவங்கிய அடுத்த சில நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் சுமார் 6 லட்சம் வீரர்களையும் டாங்கிகளையும் திபெத் மற்றும் அருணாச்சல் பகுதிக்குள் சீனா அனுப்பலாம் என்றும் கணிக்கப்படுகிறது. வல்லுநர்கள் கூற்றுப்படி சீனா இவ்வளவு வீரர்களை அனுப்பாது, அப்படி அனுப்பினால் இந்திய ராணுவம் சுமார் இரண்டு லட்சம் சீன வீரர்கள் சுமார் 2000 டாங்கிகள் மற்றும் 3000 கவச வாகனங்களை எதிர்த்து போரிட வேண்டியிருக்கும்,

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?


இத்ற்கிடையே இந்திய ராணுவம்’ தவாங்’ பகுதியில் எந்தச் சீன படையையும் துவம்சம் செய்யும் அளவு பலத்தோடு உள்ளது குறிப்பாக சொல்லப்போனால் இந்திய ராணுவத்திலேயே அதிகம் பலம் வாய்ந்த 4-வது கார்ப்ஸ் படைப்பிரிவின் 5-வது மலைப்பிரிவு ராணுவம், இந்த சிறப்பு ராணுவ பிரிவு போரின் முதல் நாளிலேயே சீன எல்லைக்குள் புகுந்து சில இடங்களை கைப்பற்றி விடும். இந்த படைக்கு உதவியாக அருகில் உள்ள விமான ஓடுபாதைகள் தொடர்ந்து ஆயுதங்களையும் உணவுகளையும், தேவைப்பட்டால் எல்லை கடந்து கொடுக்கவும், அதோடு எதிரி நிலைகளை தாக்க ஹெலிகாப்டர்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தும்.
எல்லையில் சீனாவுக்கு சாதகமான இடங்கள் அனைத்திலும் சீனா தனது முழு பலத்தோடு உள்ளது, அதாவது 31 இடங்கள்.. இந்தியாவும் அது போல சுமார் 73 இடங்களை கண்டறிந்து அங்கு முழு வீச்சில் வேலைகளை செய்து வருகிறது போரின் போது 4000 கிலோமீட்டர் நீள சீன எல்லையில் இந்தியா சுமார் 8 டிவிசன் மலைகளில் ராணுவ வீரர்களை அனுப்பும், சுமார் 1,60,000 வீரர்கள் அதோடு டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவற்றையும் அனுப்பும்.

இப்பெரும் படை அதே அளவு சக்தி கொண்ட மற்றும் பக்க பலம் கொண்ட சீனா வீரர்களை தாக்கும். மொத்தத்தில் சீனா சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் பகுதியில் பலத்தோடு உள்ளது, இந்தியா லே மற்றும் தவாங் பகுதியில் பலத்தோடு உள்ளது.

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?

கப்பற்படை இறங்குமா?
இதற்கிடையே கப்பற்படை போர் என்பதற்கு சாத்தியமே இல்லை, காரணம் சீனா தனது கப்பலைகளை தளத்திலிருந்து நெடுந்தூரம் அனுப்ப வேண்டும், மேலும் இந்திய கடல் எல்லைகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன. போரின் போது ஒரு வேளை சீன கப்பல்கள் இந்திய கடல் எல்லையிலோ அல்லது கடல் எல்லைக்கு அருகிலோ தென்பட்டால், கண்டிப்பாக தாக்கி அழிக்கப்படும்.

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?


இந்திய அமெரிக்க கப்பற்படை ஒப்பந்தத்தின் படி சீனாவின் போர்க்கப்பல்கள் நகர்வு குறித்து இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா தகவல்களை தந்து கொண்டே இருக்கும்.அதனால் தற்கொலைக்கு சீன கப்பல் படை முயற்சிக்காது.

ஏவுகணை தாக்குதல்கள்
இந்திய ராணுவத்தில் சுமார் 900 ப்ரமோஸ் ஏவுகணைகள் உள்ளன, அதில் சுமார் 600 தான் சீனா எல்லையில் நிலை நிறுத்தப்படும், இவை சீன ஆர்டிலரி தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அழிக்க பயன்படுத்தப்படும்.

இந்தியா – சீனா போர் வந்தால் ‘முடிவு’ என்னவாகும் ?


போர் என்று வந்து விட்டால் வெற்றி-தோல்வி என்பதைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. அந்த வகையில் ஒரு போரின் உச்சகட்ட தாக்குதல் என்பது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும். அப்படி இந்தியாவோ, சீனாவோ, ரஷ்யாவோ, அமெரிக்காவோ – எந்த நாடாக இருப்பினும், அணு ஆயுத தாக்குதல் என்று வந்துவிட்டால் நிச்சயமாக ஒருவழிப்பாதை தாக்குதலாக இருக்காது.
எடுத்துக்காட்டுக்கு இந்தியா, சீனாவின் மீது ஒரு அணு ஆயுத தாக்குதலை தொடங்கிய சில நொடிக்குள் சீனாவும் எதிர் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நிதர்சனம். அப்படியாக நிகழும் ஒரு அணு ஆயுத பேரழிவிற்கு பின்னர் இந்தியா என்ற பசுமை தேசமும், சீனாவின் பரந்த நிலமும் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அப்படியோரு அணு ஆயுத தாக்குதல் கட்டம் சென்றுவிடக்கூடாது என்பதுதான் உலக நாடுகளின் எண்ணமாக உள்ளது.
இரண்டு பலம் வாய்ந்த சக்திகள் மோதுவது நாட்டுக்கும், மக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் இந்தியா ராஜதந்திர வழியில் கையாள்வதை உலகம் கவனித்து வருகிறது.

இர.சுபாஸ் சந்திர போஸ்