எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

 

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

அன்பு மற்றும் பக்தியின் அடையாளமாக திகழும் மங்களகரமான குங்குமத்தில் தெய்வீக தன்மை, மருத்துவ குணம், சுப தன்மை, அதிக நேர்மறை சக்திகள் அடங்கியுள்ளதால், நெற்றியில் இடும் பொழுது உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது.

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

ஒரு முறை சீதா தேவியின் அருகில் இருந்த வாயுபுத்திரன் ஹனுமன் அவர் நெற்றியின் நடுவில் ஏன் குங்கும திலகம் இட்டிருக்கிறார் என்று கேட்டார். இந்த குங்குமமானது ராமபிரான் மீது தான் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் அடையாளம் என சீதாதேவி கூற, வாயுபுத்திரனோ தன் உடல் முழுவதும் குங்குமத்தை பூசிக்கொண்டார். இதனை பார்த்த ராமபிரான் வாயுபுத்திரன் ஹனுமனின் பக்தியை நினைத்து மகிழ்ந்து இனி உன்னை குங்குமம் வைத்து வணங்குபவர்கள் அனைத்து வளங்களையும் பெறுவார்கள் என்றும் வரமளித்தார்.

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

நம் கையில் உள்ள ஐந்து விரல்களும் ஐந்து சொந்த பந்தங்களை குறிக்கின்றன. பெருவிரல் பெற்றோரையும், ஆள்காட்டி விரல் நம் உடன்பிறந்தவர்களையும், நடுவிரல் நம்மையும், மோதிர விரல் வாழ்க்கை துணையையும், சுண்டு விரல் நம் பிள்ளைகளையும் குறிக்கின்றன. ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் விரல்களால் நெற்றியில் இடும் குங்குமத்தின் மகிமையை பார்க்கலாம்.
குங்குமத்தை வெற்றியின் அடையாளமாகக் கருதக்கூடிய பெருவிரலால் குங்குமத்தை நெற்றியில் இட்டால், துணிவும், மன வலிமையும், தைரியமும் அதிகரிக்கும். அதனால்தான் ஒரு ஆண் எப்போதும் தனது மனைவிக்கு பெருவிரல் மூலமாக திலகத்தை இடுகிறார்.
ஆள்காட்டி விரல் மூலம் குங்குமத்தை நெற்றியில் இட்டால், ஆளுமை திறன், முதலாளித்துவ பண்பு, முன்னனித்தன்மை போன்றவற்றை ஊக்குவிக்கும். எனவேதான், வீட்டில் இருக்கும் மூத்த மருமகள் அல்லது மூத்தமகள் இதுபோன்று குங்குமத்தை நெற்றியில் வைப்பார்கள்.
சனி விரல் என்றழைக்கப்படும் நடு விரலில் குங்குமம் வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையிலிருந்து தீர்வு காண உதவும். அதேபோல் தீர்க்க ஆயுளையும் தெய்வீகத்தன்மையையும் கொடுக்கும். இது உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

மோதிர விரலின் அடி முதல் நுனி வரை இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது. உங்கள் கம்ப்யூட்டருக்கான மௌஸை போன்றது இவ்விரல். சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும். இந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும். பிரபஞ்சத்தின் அடையாளமாக திகழக்கூடிய மோதிர விரலால் நெற்றியில் குங்குமத்தை இடுவது மற்ற விரல்களை காட்டிலும் சிறந்தது.
கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலதுக்கையில் வாங்கி இடதுகைக்கு மாற்றக்கூடாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற முடியும்.

-வித்யா ராஜா