சசிகலாவின் திட்டம்தான் என்ன? பர,பர தகவல்கள்

 

சசிகலாவின் திட்டம்தான் என்ன? பர,பர தகவல்கள்

சிறையிலிருக்கும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகி வெளியில் வரலாம் என்கிற நிலையில், அவரது வருகையால் தமிழக அரசியலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. சசிகலா வருகையால் தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்படும் எனவும், அவரது வருகை அப்படி ஒன்றும் சலசலப்பை ஏற்படுத்தி விடாது என்றும் பேசி வருகிறார்கள்.

சசிகலாவின் திட்டம்தான் என்ன? பர,பர தகவல்கள்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்பது தவிர கடந்த 15 ஆண்டு கால அரசியல் விவகாரங்களைக் கறைத்து குடித்தவர் சசிகலா. அது மட்டுமல்ல. அதிமுகவை பின்னணியில் இருந்து இயக்கியவர்.அவரது சிபாரிசின் பேரில் கட்சியில் களம் கண்டு பதவிகள் பெற்றவர்கள் பலபேர். நிலமை இப்படியிருக்க கர்நாடக சிறியி இருந்து விடுதலயாகும் சசிகலா அப்படி ஒன்றும் சும்மா இருந்து விட மாட்டார்.நிச்சயம் அதிமுகவை கையிலெடுக்கும் முயற்சியில் இறங்குவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற குழப்பம் தீர்ந்து ஒட்டு மொத்த அதிமுகவும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் இருக்கிறது.

சசிகலாவின் திட்டம்தான் என்ன? பர,பர தகவல்கள்

இது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடயே கூட்டணி பற்றிய முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சசிகலாவை பொறுத்தவரை இன்னும் ஓரிரு நாட்களில் அவர் விடுதலையாவார் என்று சொல்லப்பட்டாலும் அவரது விடுதலை ஜனவரியை விட்டு தள்ளிப் போகாது என்று சொல்லப்படுகிறது. எனவே அவர் தேர்தலுக்கு முன்னதாவே விடுதலையாகி விடுவார்.அவர் விடுதலையாகி வெளியில் வந்ததும் என்ன செய்யப்போகிறார்? என்பதுதான் தமிழக அரசியலில் இப்போதைக்கு மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆகும்.

சசிகலாவின் திட்டம்தான் என்ன? பர,பர தகவல்கள்

அதிமுக எடப்பாடி வசமாகி விட்டது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் சசிகலா கட்சியில் தன்னால் சேர்க்கப்பட்டு,தன்னால் வளர்ந்த பலரை அழைத்து பேசவிருக்கிறார்.இதற்கான திரை மறைவு வேலைகள் தொடங்கி விட்டன என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர்.