தமிழகத்தில் இன்று எவையெல்லாம் இயங்கும்?

 

தமிழகத்தில் இன்று எவையெல்லாம் இயங்கும்?

தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை டாக்சி , ஆட்டோ மே 10 முதல் 24ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. இரண்டு வார ஊரடங்கை முன்னிட்டு இன்றும் தமிழகத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சென்னையில் மாநகர பேருந்துகள் இன்று இரவு 9 மணி வரை இயக்கப்படும்

சென்னையில் இன்று ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயங்கும்

தமிழகத்தில் இன்று எவையெல்லாம் இயங்கும்?

மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கின் போது சென்னையில் மெட்ரோ ரயில்களும் இயங்காது என அறிவிப்பு

இன்று அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்கும்

தமிழகம் முழுவதும் இன்றும் சலூன் கடைகள் இயங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

பயணிகள் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இன்று இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருக்கும் முக்கிய நகரங்களுக்கும் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம் சிறப்பு பொதுமக்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தல்.

தமிழகத்தில் இன்று எவையெல்லாம் இயங்கும்?

பேருந்து முன்பதிவுக்கு www.tnstc.in இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.