“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

 

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

இந்தியா-இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் படை தங்களது சிறப்பான பந்துவீச்சை அளித்தனர். அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குறைந்த ரன்களிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டினர். ஆனாலும் யார் போனாலும் எனக்கு கவலையில்லை என்ற நோக்கத்திலேயே கேப்டன் ஜோ ரூட் கலக்கினார். ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்தியா vs இங்கிலாந்து என்பதற்குப் பதிலாக இந்தியா vs ஜோ ரூட் என்ற நிலைக்குச் சென்றது. அந்தளவிற்கு நங்கூரமிட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைச் சரிவிலிருந்து மீட்டு தோல்வியிலிருந்து தப்பிக்க வைத்தார்.

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

ஆனால் அவர் மட்டுமே அணி இல்லையே. அதற்கான பிரதிபலனை லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆம் டெஸ்டில் இங்கிலாந்து வாங்கி கட்டிக்கொண்டது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படும் இந்திய அணி ஒருபுறம் ஜோ ரூட்டை மட்டுமே நம்பியிருந்த இங்கிலாந்து அணி மறுபுறம். இந்தியாவில் கூட ஒருவர் விட்டால் ஒருவர் அடிப்பார் என்ற நிலை இருந்தது. ஆனால் இங்கிலாந்திலோ ரூட்டை விட்டால் ஆளே இல்லை என்பது போன்றே ஆட்டம் சென்றது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் ப்ரைம் ஃபார்மில் இருந்ததால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சோபிக்க முடியவில்லை.

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

ஆனால் இவர்கள் மூவருக்கும் சிம்மசொப்பனமாக ரூட் திகழ்ந்தார் என்பதையும் நாம் மறுக்க முடியாது. முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுலின் அற்புதமான சதத்தால் இந்தியா வலுவான நிலைக்குச் சென்றது. ரோஹித் சர்மாவும் கம்பேனி கொடுக்க மளமளவென ரன்கள் ஏறின. நான் மட்டும் என்ன சும்மாவா என்ற ரேஞ்சில் ரூட் மட்டையைப் போட 180 ரன்கள் எடுத்து இந்தியாவிற்குப் பதிலடி கொடுத்தார். இதனால் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருந்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாகவே இந்தியாவை சுருட்டிவிட்டால் போதும்; இங்கிலாந்துக்கு வெற்றி என கள நிலவரம் சொன்னது. ஆனால் இங்கிலாந்து ஆசாமிகள் தேவையில்லாமல் டெய்லெண்டர்களான ஷமியையும் பும்ராவையும் சீண்டி பார்க்க அவர்கள் பொளந்துவிட்டார்கள்.

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

இதனால் குறிப்பிடத்தக்க ரன்களைக் குவித்து இந்தியாவிற்கு வெற்றி ஒளியைப் பாய்ச்சினர். கொஞ்ச கொஞ்சமாக இங்கிலாந்திடமிருந்து ஆட்டம் கைநழுவிப் போனது. அதனை மொத்தமாகப் பறித்தார் இளம்புயல் சிராஜ். பும்ராவும் இணைந்துகொண்டார். மொத்தத்தில் இங்கிலாந்தின் ஆட்டம் அப்போதே முடிந்துவிட்டது. வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணி எப்படியாவது ஆட்டத்தை டிரா செய்ய வேண்டும் என போராடியதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெறும் 120 ரன்களுக்கு சுருண்டதால், கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

இச்சூழலில் நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் மூன்றாம் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்கி விடக் கூடாது என்பதில் இங்கிலாந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதற்காக அணியில் சில மாற்றங்களையும் அறிவித்துள்ளது. தொடர்ந்து சொதப்பிவந்த பேட்ஸ்மேன் கிராலே மற்றும் சிப்லே ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் டேவிட் மாலன் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அதேபோல பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ஷகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

“மீண்டும் இந்தியாவிடம் அடிவாங்க தயாரில்லை” – புது ரூட்டில் ஜோ ரூட்… கோலியிடம் ஜம்பம் பலிக்குமா?

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடுவரிசையில் நங்கூரமிட்டு ஆட வேண்டிய புஜாரா அவ்வப்போது காலை வாரிவிடுகிறார். அதனால் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மற்றபடி எந்த மாற்றங்களும் இருக்காது. அணிகள் தேர்வு, வீரர்களின் திறமை ஒருபுறம் இருந்தாலும் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய மிக முக்கிய அம்சமாக இங்கிலாந்து வானிலையும் இருக்கிறது. போட்டி தொடங்கும் முதல் நாள் வெயில் நீடித்தாலும் அடுத்தடுத்த நாட்களில் மழை வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடைசி நாளில் சேஸிங் செய்வது கடினமாக இருக்கும். ஆகவே இஷாந்த் சர்மா உட்கார வைக்கப்பட்டு ஆல்ரவுண்டரான அஸ்வின் உள்ளே கொண்டுவரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.