இ -பாஸ் எடுக்காமல் வந்தால் என்ன சிக்கல் தெரியுமா.!?

 

இ -பாஸ் எடுக்காமல் வந்தால் என்ன சிக்கல் தெரியுமா.!?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும் மாவட்டங்கள் அனைத்தும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து வரும் மக்கள் இ-பாஸ் உடன் தான் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இ -பாஸ் எடுக்காமல் வந்தால் என்ன சிக்கல் தெரியுமா.!?

இதே நடைமுறை தான் நாகை மாவட்டத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் எல்லாம் கொரோனா பரிசோதனைக்கு பிறகே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அப்படி பாஸ் இல்லாமல் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து முருகேசன்-கீர்த்திகா என்ற தம்பதி இ-பாஸ் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை காரில் நாகைக்கு திரும்பியுள்ளனர்.

இதனை அறிந்த நாகப்பட்டினம் போலீசார் அந்த தம்பதி மீது காவல்துறை உத்தரவை மீறியதாக நோய்த்தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை கொரோனா பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தனிமைப்படுத்தியுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் காவல்துறை உத்தரவை மீறி செல்பவர்களுக்கு இது தான் தற்போதைய நிலை.