“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என அவலக்குரல்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எழ ஆரம்பித்திருக்கின்றன. வெளியே கத்திச் சொன்னால் கிடைக்கிற சீட்டும் கிடைக்காமல் போகும் என அஞ்சி உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் என்று வந்துவிட்டாலே சிறிய கட்சிகளின் தயவு மாபெரும் கட்சிகளுக்குக் கட்டாயம் தேவையாக மாறிவிடுகிறது. மற்ற நாட்களில் அவற்றை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும், தேர்தல் நேரங்களில் ரத்தின கம்பளத்தில் வரவேற்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

ஆனால் அதெல்லாம் அப்போ. இப்போ நிலையே வேறு. சிறிய கட்சிகள் தான் அதிக சீட்டுகளைப் பெற அதிமுகவிடம் திமுகவிடமும் மன்றாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதால் பாமகவை மட்டும் அதிமுக சமரசம் செய்து கைக்குள் போட்டுவிட்டது. ஆனால் மற்ற கட்சிகளை லெப்ட் ஹேண்டில் தான் டீல் செய்துகொண்டிருக்கிறது. பாஜகவிடம் பம்முவது போல் நடித்து புதுப்புது காரணங்களைக் கூறி பேச்சுவார்த்தையில் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக பிரதர்ஸ்.

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் தான் சரத்குமார் தனித்துப் போட்டி, மூன்றாவது அணி என மாற்றத்தை நோக்கி மாற்றுப் பாதையில் பயணப்பட்டுவிட்டார். இன்னபிற கட்சிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றன. அனைத்திற்கும் காரணம் ஜெயலலிதா இல்லாமல் கட்சி வலுவிழந்து போயிருக்கிறது. அதேபோல சசிகலா வேறு ஒரு பக்கம் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் தனித்துப் போட்டியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை நம்பியே இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

இது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை. திமுகவில் இருக்கும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான் ஏற்பட்டிருக்கிறதாம். காங்கிரஸின் நிலையை சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனானபட்ட மதிமுகவுக்கே அந்த நிலைமை தானாம். அதிக போட்டிகள் வேண்டுமென்றால் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும்; இல்லையென்றால் நாங்கள் கொடுக்கும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிலை தான் விசிகவுக்கும். கொடுப்பதே வாங்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் கிளம்பிவிடுங்கள் என்பதே திமுக மறைமுகமாக கூறவிழைவது.

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

இதற்குக் காரணம் கருணாநிதி இல்லாத முதல் தேர்தல். நிச்சயமாக இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். அதுமட்டுமில்லாமல் அடுத்த தேர்தலுக்கு ஸ்டாலினின் உடல்நிலையும், அவரின் வயோதிகமும் ஒத்துழைக்குமா என்பது அவருக்கே தெரியாத உண்மை.

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

2016ஆம் ஆண்டு தேர்தலிலேயே காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் ஒதுக்கி தான் படாத பாடு பட்டது. ஆகவே இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதால் கூட்டணிக் கட்சிகளிடையே கறாராக நடந்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது.

திமுகவுக்கு கூடுதலாக ஒரு சவாலும் காத்திருக்கிறது. இப்போதைய கருத்துக்கணிப்பின்படி திமுகவே வெற்றிபெறும் என்று தெரிகிறது. அப்படியிருக்கையில் சிறிய கட்சிகளூக்கு சீட்டை கொடுத்து பணத்தைச் செலவழித்து ஜெயிக்க வைத்தபின், பாஜக அவர்களை ஹைஜாக் செய்துவிட்டால் ஆட்சி கவிழும் நிலை கூட ஏற்படலாம். இதனால் தேவையற்ற பரிசோதனையை ஸ்டாலின் விரும்பவில்லை.