Home சினிமா ’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?

’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?

ஆறுமுறை சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்றவர் கவிஞர் வைரமுத்து. 1980-ல் நிழல்கள் படத்தில் தொடங்கிய இவரின் திரைப்பட பாடல் வாழ்க்கையில் ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வந்துள்ளன. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என இருபெரும் இசை ஜாம்புவான்களிடம் காலத்தால் மறக்கவே முடியாத பாடல்களை எழுதியவர் வைரமுத்து.

’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?

Karunanidhi dmk

சினிமா தொடர்பாக மட்டும் அல்லது சமூகம் சார்ந்த மேடைகளிலும் இடம்பெறுபவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர். அதனால், அவரின் இலக்கிய மேடைகளில் வைரமுத்துக்கு நிரந்தர இடம் இருந்தது. சென்ற ஆண்டில் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்தார் பாடகி சின்மயி. அது சினிமா வட்டாரத்தில் கடும் பிரளயத்தை ஏற்படுத்தியது. ஆயினும் வைரமுத்து அவற்றிற்கு பதில் ஏதும் சொல்லவில்லை.

’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?

வைரத்துவின் பாடல்கள் வழக்கம்போல தொடர்ந்தது. சில நாட்களுக்கு முன் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பாராட்டி.

’ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.’ எழுதியிருந்தார்.

’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?

அதேநேரம் மும்மொழிக் கல்வி அவசியம் இல்லை என்பதைச் சுட்டும் வகையில், அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென்று ’பொதுவாழ்வுப் போராளிகளே! பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன. சலசலப்பு இல்லாவிடில் பனங்காட்டுக்கேது பாட்டு? அவதூறுகள் இல்லாவிடில் உயிர்வாழ்வுக்கேது ஊட்டம்? பழிக்கப்படும்வரை நீங்கள் உயிர்ப்போடும்… உயர்வோடும்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதன்மூலம் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் புகாருக்குப் பதில் சொல்ல வைரமுத்து நினைக்கிறாரா… அல்லது புதிய கல்விக் கொள்கை குறித்த மாறுபட்ட கருத்திற்கு புதிதாக அவருக்கு மிரட்டல் வந்திருக்கிறதா… என நெட்டிசன்கள் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டனர்.

’பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன’ வைரமுத்துவின் ட்விட் மூலம் சொல்வது என்ன?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும்...

“கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்க” – பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை இந்த...

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

திருப்பூர் திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை விரைவில் தொடங்க உள்ளது. திருப்பூர்...
- Advertisment -
TopTamilNews