நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?

 

நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?

நம்முடைய உடலே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வைட்டமின் டி உற்பத்தி மனிதர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். இருப்பினும் இந்தியாவில் வைட்டமின் டி சத்து குறைபாடு அதிகம் உள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
நம்முடைய உடலில் இயக்கத்துக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் டி-யும் ஒன்று. ஆரோக்கியமான, வலிமையான எலும்பு மற்றும் பற்களுக்கு, சில ஹார்மோன்கள் உற்பத்திக்கு, தசைநார்கள் உறுதியாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்று அதன் தேவை மிகமிக அவசியமாக உள்ளது.

நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?


வைட்டமின் டி தான் நம்முடைய உடலில் கால்சியம் அளவை ஒழுங்குபடுத்தி, பாஸ்பரஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. பாஸ்பரஸ் அதிகரிக்கும் போது கால்சியம் உடலில் இருந்து வெளியேறும். இந்த இரண்டு தாது உப்புக்களின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதன் மூலம் எலும்புகளின் உறுதியை வைட்டமின் டி உறுதி செய்கிறது.
நாம் தினமும் எத்தனை கப் பால் அருந்தினாலும், கால்சியம் மாத்திரை விழுங்கினாலும் அதை உடல் கிரகிக்க வைட்டமின் டி அவசியம். இல்லை என்றால் கால்சியத்தை நம்முடைய சிறுநீரகம் வெளியேற்றிவிடும்.

நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?


குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் என்ற எலும்பு நோய் வருவதைத் தடுக்க வைட்டமின் டி அவசியம். அதே போல் பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா என்ற எலும்பு அடர்த்தி குறைவு பிரச்னை வராமல் தடுக்கவும் வைட்டமின் டி அவசியம்.
ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு பிரச்னை உள்ளவர்களுக்கு எல்லாம் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காண முடியும் என்கின்றன ஆய்வுகள்.
குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக அவர்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் பிரச்னை எழலாம். மேலும் அது குழந்தைகளின் இதய ரத்தக் குழாய் சுவர்களை இறுக்கம் அடையச் செய்கின்றன.

நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?


நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை அடையச் செய்து பாக்டீரியா, வைரஸ் கிருமிகளுக்கு எதிராக உடலைத் தயாரிக்க வைட்டமின் அவசியம்.
வைட்டமின் டி-யை நம்முடைய சருமமே தயாரிக்கும். இருப்பினும் போதுமான அளவு வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது, வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீன் கிரீம்களை தடவிக்கொள்வது, குழந்தைகளை வெயிலில் காட்டாமல் ஏசி அறைக்குள்ளேயே வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நம் உடலே உற்பத்தி செய்யும் வைட்டமின் டி… ஆனாலும் பற்றாக்குறை எதனால் வருகிறது?
side view of a couple walking on the beach


இதைத் தவிர்க்க தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனில் உடல் படும்படி நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இது தவிர எண்ணெய் சத்து மிக்க மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், மாட்டின் கல்லீரல், காளான் போன்றவற்றில் சிறிதளவு வைட்டமின் டி உள்ளது.
12 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 10 மைக்ரோ கிராமும், 1 முதல் 70 வயது உள்ளவர்களுக்களுக்கு 15 மைக்ரோ கிராமும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தினசரி 15 மைக்ரோ கிராமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 மைக்ரோ கிராமும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, வைட்டமின் டி அதிகரித்தாலும்… அதாவது ஒரு நாளைக்கு 4000 ஐ.யூ அளவைத் தண்டினால் அது சிறுநீரக, நுரையீரல், இதய திசுக்களை பாதிக்கும்.