எந்த கிழமைகளில் என்ன தானம் செய்யலாம்? தானம் கொடுக்க உகந்த நேரம் எது?

 

எந்த கிழமைகளில் என்ன தானம் செய்யலாம்? தானம் கொடுக்க உகந்த நேரம் எது?

தானம் என்பது மிகவும் சிறந்தது. நாம் என்ன விரும்புகிறோமோ அந்த உணவை, பொருளைத் தானமாக வழங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மற்றவரின் தேவையை அறிந்து நாம் தானம் வழங்கும் போது அவர்களின் மனம் மகிழும். அதன் மூலம் அவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார். அதைப்போல் தானங்கள் நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை சேர்க்கும். இவற்றையெல்லாம் தாண்டி தானம் செய்யும்போது நமக்கு ஒரு மனநிறைவு ஏற்படும்.

எந்த கிழமைகளில் என்ன தானம் செய்யலாம்? தானம் கொடுக்க உகந்த நேரம் எது?

ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லத்தை நாம் தானமாக அளிக்கலாம். அதேபோல் திங்கட்கிழமை நெய்யை தானம் வழங்கலாம். செவ்வாய்க்கிழமை மரக்கன்று, புதன்கிழமை கல்வி உபகரணங்களையும் , வியாழக்கிழமை வஸ்திரத்தையும், வெள்ளிக்கிழமை அன்னத்தையும் சனிக்கிழமை எண்ணெய்யை நாம் தானமாக வழங்கலாம். அவ்வாறு செய்யும்போது நமக்கு மகத்தான வாழ்வு மலரும் என்பது ஐதீகம்.ஆனால் செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய தயங்குவார்கள். காரணம் இதுபோன்ற செய்யும் போது நம்மிடம் உள்ள செல்வம் பறிபோய் விடுமோ என்ற பயம் பலருக்கு ஏற்படும்.

எந்த கிழமைகளில் என்ன தானம் செய்யலாம்? தானம் கொடுக்க உகந்த நேரம் எது?

நல்ல நாள் என்பதெல்லாம் தானத்தில் அவசியமே இல்லை. சூரிய வெளிச்சம் படர்ந்து இருக்கும் பகல் வேளையில் தானம் கொடுப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. இதனால் கொடுப்பவருக்கு புண்ணியம் மட்டுமின்றி , பெற்றுக்கொள்வதற்கும் செல்வம் வந்து சேரும். அதேபோல் தரித்திரம், பயம் விலகும் என்று சொல்லப்படுவதுண்டு. அத்துடன் நாம் தானம் வழங்கும் போது சூரிய பகவான் சாட்சியாக இருந்து சகலத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனால் நமக்கு அவர் சாட்சியாக இருந்து சகல பாக்கியங்களையும் வழங்குவார் என்பது நம்பிக்கை.