சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

 

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

தமிழ்நாட்டின் தற்போதைய சட்டப்பேரவை தலைவராக அதாவது சபாநாயகராக ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 16ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகர். நெல்லை மாவட்டத்திலிருந்து வரும் ஐந்தாவது சபாநாயகர். சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பார்த்துவிட்டோம். அவருக்கான அதிகாரங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

எப்போதுமே வடக்கிற்கு தெற்கிலிருந்து தான் பாடம். அதேபோல சபாநாயகருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா என இந்தியாவே வாயைப் பிளந்து பார்க்கவைத்தது தெற்கே உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தான். சபாநாயகருக்கான அதிகாரங்களைப் பட்டவர்த்தனமாக இந்தியாவிற்கு உணர்த்தியவர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி பிஎச் பாண்டியன். 1985-1989 இடைப்பட்ட காலத்தில் சபாநாயகராக இருந்த பாண்டியன் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கி அதிரடி காட்டினார்.

அதில் ஒன்று அரசியல் சாசன நகலை எரித்த காரணத்திற்காக 10 திமுக எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், நீதிமன்றத்தை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் சட்டப்பேரவைக்கு தான் அதிகாரங்கள் அதிகம் என்றார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாக அப்போதே சூளுரைத்தார். அப்படியென்ன வானளாவிய அதிகாரங்கள் இருக்கின்றன?

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

அதிகாரங்கள் என்னென்ன?

1.சபாநாயகரும் ஒரு அரசியல் கட்சியின் எம்எல்ஏ தான் என்றாலும் கூட சட்டப்பேரவையிலும் பேரவைக்கு வெளியிலும் கட்சி சார்பற்றே நடந்துகொள்ள வேண்டும்

2.உரிய விதிமுறைகளின்படி பேரவையை நடத்திச் செல்லும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு

3.சபாநாயகருக்கு சட்டப்பேரவை மற்றும் அதன் அலுவலகத்தின் மீது முழு அதிகாரம் உண்டு

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

4.அவையில் பேசும் எம்எல்ஏக்களின் கருத்துக்களைப் பதிவேடுகளில் சேர்க்கவும், தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் உண்டு; யார் பேச வேண்டும், யார் பேசக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம்

5.எம்எல்ஏக்கள் மீது புகார் கொடுத்தால் அவர்களைத் தற்காலிகமாகவோ, கூட்டத்தொடர் முழுவதுமோ கலந்துகொள்ள தடை விதிக்கலாம்

6.பேரவை நாள் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டிருக்கும்போது, எந்த நாளிலும் பேரவையைக் கூட்டும் அதிகாரம் உண்டு

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

7.சபாநாயகர் எழுந்து நின்றால் மற்ற உறுப்பினர்கள் யாரும் பேசக்கூடாது; உரையாற்றிக் கொண்டிருப்பவர்கள் கூட உரையை நிறுத்திவிட்டு அமர்ந்து விட வேண்டும்; அதேபோன்று சபாநாயகர் பேசிக்கொண்டிருக்கும்போது யாரும் எழுந்து செல்லக்கூடாது

8.பேரவையில் வாக்கெடுப்புகள் நடந்தால், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது சபாநாயகரின் முடிவே இறுதியானது; ஒழுங்குப் பிரச்னைகள் குறித்தும் அவரின் முடிவே இறுதியானது

9.கூட்டத்திலிருந்து எம்எல்ஏ ஒருவரை வெளியேற்றுவது, அவை நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைப்பது, கூட்டத்தை ஒத்திவைப்பது உள்ளிட்ட சபாநாயகருக்கே உரித்தான அதிகாரம்

10.சட்டப்பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சபாநாயகரின் அனுமதியின்றி எவர் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்ய முடியாது

சபாநாயருக்கான வானளாவிய அதிகாரங்கள் என்னென்ன? – வடக்கிற்கு தெற்கிலிருந்து சென்ற பாடம்!

11.பேரவையின் மாண்பைக் குலைக்கும் வகையிலோ, களங்கம் கற்பிக்கும் வகையிலோ பேரவைக்கு வெளியில் செயல்பட்டாலும் அவர்களைக் கண்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது

12.பேரவைக்குள் எந்த உறுப்பினராவது மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவரை சில நாட்களுக்கு இடைநீக்கம் செய்வது, முழுமையாக தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் உண்டு

13.மிக முக்கியமாக சபாநாயகர் எடுக்கும் முடிவுகள் குறித்து நீதிமன்றங்கள் தலையிடுவதே இல்லை