தமிழகத்தில் புதிய தளர்வுகள் என்னென்ன?

 

தமிழகத்தில் புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் புதிய தளர்வுகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், இறப்பும் குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் பற்றி ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் மதியம் 2 மணிக்கு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை செய்ய இருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் புதிய தளர்வுகள் என்னென்ன?

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்றவாறு தளர்வுகளும், ஊரடங்கும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிய தளர்வுகள் என்னென்ன?

அந்த வகையில் கடந்த மாதம் புதிய தளர்வுகள் குறித்து அறிவித்த முதல்வர் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி நாளை மறுநாள் நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டம் குறித்து முதல்வர் இன்று ஆலோசிக்க உள்ளார். டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளில் புறநகர் ரயில் சேவை, மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.