பங்குனி உத்திர விரதமிருந்தால் இத்தனை நன்மைகளா?

 

பங்குனி உத்திர விரதமிருந்தால் இத்தனை நன்மைகளா?

பங்குனி உத்திர திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் முருகன் கோயில்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.

பங்குனி உத்திர விரதமிருந்தால் இத்தனை நன்மைகளா?

முருகப்பெருமானை கொண்டாட நமக்கு பல காரணங்கள் இருந்தாலும் முருகனை கொண்டாடும் திருவிழாக்களில் மிகமுக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பங்குனி உத்திரத் திருவிழா.
பங்குனி மாதத்தில் ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழின் 12-வது மாதம் பங்குனியும்,12-வது நட்சத்திரம் உத்திரமும் சேரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் சந்திரன் முழு நிலவாக அற்புதமாகக் காட்சியளிப்பார். அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா விசேஷமாக கொண்டாடப்படும்.இந்த நாளில் தான் பார்வதி திருமணம் நடந்தது, முருகன்-தெய்வானை கல்யாணம், ஐயப்பன் அவதரித்த நாள், மகாலட்சுமி அவதரித்த நாளாக கூறப்படுகிறது.

பங்குனி உத்திர விரதமிருந்தால் இத்தனை நன்மைகளா?

அந்த வகையில் கடந்த 22ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடக்கும் இந்நிகழ்வில் முருக பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கி வருகின்றனர்.நாளை விழாவின் முக்கிய நிகழ்வான தி பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளதால் முருககோவில்களில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.பழனியில் பங்குனி உத்திரவிழாவை யொட்டி இன்றும் மற்றும் நாளை தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூரில் பங்குனி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தயார்நிலையில் உள்ளன. பங்குனி உத்திரம் அன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்த நாளில் விரதமிருப்போர் சகல செல்வங்களுடன் வாழ்வின் உயரத்துக்கு செல்வர் என்றும் நம்பப்படுகிறது. பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபடவேண்டும். அதேபோல் அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்கலாம் அல்லது பால், பழம் அருந்தலாம். பின்பு மாலை முருகன் கோவிலுக்குச் சென்று விரதத்தை முடித்து கொள்ளலாம்.